உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் ஆலயத்தில் இன்று ஸ்ரீ சிவகாம சுந்தரி ஸமேத ஆனந்த நடராஜ ராஜமூர்த்தி ஆவணி மஹாபிஷேகத்திற்காக கனகசபையில் நடைபெற்று வருகிறது
கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் சித் சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகா மசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜ மூர்த்திக்கு சித்தி ரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மார்கழி,மாசி மாதங்க ளில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்
ஆனித்திருமஞ்சனம் மார்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின்போது, ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதி காலை சூரிய உதயத்துக்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகச பையிலும் மகாபிஷேகம் நடைபெறும்.
கனகசபையில் மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 11 மணிவரைநடைபெறுகிறது. ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜ மூர்த்திக்கு விபூதி, பால், தயிர், தேன், சர்க் கரை,பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், சந்தனம், புஷ்பம் உள்ளிட்டவை அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாரா முன்னதாக, காலை உச்சி கால பூஜை வரை நடை பெற்று, ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்சிதர் தியை கனகசபைக்கு எழுந்த செய்து மந்த்ரக்ஷதை,லட்சார்ச்சனை நடைபெறும் யாகசாலையில் கலசங்கள்ட் புதிஞ்தாவர செய்யப்பட்டு ஸ்ரீருத்ரகிரம் அர்ச்சனை செய்து தீபாராதனை நடைபெற்றது.
நண்பகல் மகாருத்ர மக ஹோமம் நடைபெற்ற பின்னர், கலசங்கள் யாத்திராதனம் செய்யப்பட்டு மகாட் ஷேகம் நடைபெறுகிறது மகாருத்ர மகாபிஷேகத்தை முன்னிட்டு,
தட்சிணாமூர்த்தி சந்நிதியில் கூஷ்மாண்ட ஹோமம், நாந்தி,அனுக்ஞை நடைபெறுகின்றன.நேற்று சனிக்கிழமை முக்குறுண
விநாயகர் சந்நிதியில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம் நடைபெற்றது l. ஞாயிற்றுக்கிழமை நவக்கிரக சந்நிதியில் ஹோமம், தேவசபை முன் அங்குரார்பணம், ரக்ஷாபந்த னம், ஆச்சாரி யார்வர்ணம் மதுபர்க்கம், தனபூஜை நடை பெறுகின்றன.மகாபிஷேச் ஏற்பாடுகளை கோயில்பொது தீட்சிதர்கள் குழு செயலர் உ.வெங்கடேச தீட் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர்.
செய்தியாளர் ஸ்ரீமுஷ்ணம் சண்முகம்






