திருச்செந்தூரில் பாசி படிந்த பாறைகள் மேல் ஏறி பக்தர்கள் செல்பி: 50 அடிக்கு கடல் உள் வாங்கியதால் பரபரப்ப

திருச்செந்தூர் : திருச்­செந்தூரில் 50 அடிக்கு கடல் உள் வாங்கிய­தால் பர­ப­ரப்பு ஏற்­பட்டுள்­ளது. முரு­க­னின் ஆறு­படை வீடு­க­ளில் இரண்­டாம் படை வீடாக திருச்­செந்தூர் சுப்­ரமணிய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள் தோறும் ஏராளமான பக்­தர்­கள் வருகை தருவர். அதை தவிர விடுமுறை தினங்­க­ளில், திருவிழா நாட்­க­ளில் பல்­லா­யிரக் கணக்­கான பக்­தர்­கள் சாமி தரி­ச­னம் செய்து வருகின்றனர். திருச்­செந்தூர் கடற்­கரை முன்பு அமாவாசை, பவுர்ணமி தினங்­க­ளில் கடல் உள்­வாங்கி காணப்­ப­டுவது வழக்­கம் ஆனால் வருகின்ற 1 ஆம் தேதி தான் அம்­மாவாசை வர உள்­ளது. இந்த நிலை­யில் 3 தினங்­க­ளுக்கு முன்­பா­கவே இன்­றைய தினம் திருச்­செந்தூர் கட­ லானது உள்­வாங்கி காணப்­ப­டுகிறது. சுமார் 50 அடி வரை உள்­வாங்கி காணப்­ப­டுகிறது. இத­னால் கடற்­கரை 4 கிணறு பகுதி யிலிருந்து ஐயா கோவில் வரை­யிலும் கடல் உள்வாங்கி காணப்­ப­டுகிறது. திருச்­செந்தூர் கோவி­லுக்கு வரும் பக்­தர்­கள் கடல் உள்­வாங்கியது தெரி­யாமல் பாசி பிடித்த பாறையில்  ஏறி எந்­த வித  அச்­சமும் இன்றி செல்பி எடுத்து வரு­கின்­ற­னர். கடல் உள்­வாங்­ கிய­தால் பல்­வேறு சிலைகள் வெளியே தெரிகின்­றன. வருகின்­றன நவம்­பர் 2 ஆம் தேதி கந்­த­சஷ்டி விழா தொடங்க உள்ள நிலை­யில் பல லட்­சக்­க­ணக்­கான பக்­தர்­கள் கோவிலுக்கு வரு­வர். அதன்­படி வரும் மக்­கள் கடலில் நீராடும் போது கல் சிலை­கள் தட்டி விபத்து ஏற்­பட அபாயம் உள்­ளது. எனவே கந்­த­சஷ்டி திருவிழாவிற்கு முன்பே சிலை­கள் அனைத்­தை­யும் அப்புறப்­படுத்த வேண்டும் என போது மக்­கள்,பக்­தர்­கள்  கோரிகை விடுத்­துள்­ள­னர்.