அருவி பவுண்டேஷன் & கரிஷ்மா அறக்கட்டளை சார்பில் தீபாவளியை முன்னிட்டு ஆதரவற்ற, மனநலம் பாதிப்பால் கைவிடப்பட்டவர்களுக்கு உணவும் புது துணிகளும் வழங்கப்பட்டது.

அருவி பவுண்டேஷன் & கரிஷ்மா அறக்கட்டளை சார்பில் தீபாவளியை முன்னிட்டு ஆதரவற்ற, மனநலம் பாதிப்பால் கைவிடப்பட்டவர்களுக்கு உணவும் புது துணிகளும் வழங்கப்பட்டது. அறிவு பவுண்டேஷன் சார்பில் தினசரி மதிய உணவு சுமார் 100 பேருக்கு சேரன்மகாதேவி பஸ் நிலையம் எதிரில் கடந்த ஒரு வருட காலமாக வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இது தொடர்ந்து வழங்கப்படும். சுமார் எட்டு வருடங்களாக அசோக் நகரில் அருவி பவுண்டேஷன் கருணை இல்லம் நடந்து வருகிறது. இதில் ஆதரவற்றோர் முதியவர்கள் தற்சமயம் ஐந்து பேருக்கு தங்குமிடமும் மூன்று நேரம் சாப்பாடு ஆகியவைகளை வழங்கி வருகிறார்கள். இதைத் தவிர சேரன்மகாதேவி வட்டாரத்தில் ஆதரவற்று இருப்பவர்களுக்கு இறுதி சடங்குகளையும் செய்து வருகிறார்கள். வருடம் ஒருமுறை தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்து வருகிறார்கள். இது தவிர மிகவும் ஏழைபட்டவர்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு சீர் வரிசைகள் செய்து வருகிறார்கள். தாங்களும் இவர்களுக்கு உதவி செய்ய உங்கள் வீட்டு விசேஷ நிகழ்வுகளில் ஆதரவற்றோர்களுக்கு உணவு உடை அளிக்க உணவு மளிகை பொருட்கள் காய்கறிகள் மற்றும் உடுத்த தகுந்ததாக உள்ள பழைய உடைகளையும் கொடுத்து உதவுங்கள்.

உணவு உதவி செய்ய விரும்புவோர் தொடர்புக்கு
அறிவு பவுண்டேஷன் பதிவு எண் 128/2022  மற்றும் கரிஷ்மா அறக்கட்டளை
பதிவு எண் 75 /2016 சேரன்மகாதேவி

செல் : 99946 50225