பெரும் வெள்ளத்தில் சேதமடைந்த கடம்பா குளம் மறுகால் ஓடை கரையோரங்களில் ஒரு லட்சம் பனை மர விதை நடும் பணியில் இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
********************************
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி ஒன்றியம், அங்கமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கடம்பா குளம் மறுகால் ஓடை கரைகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சேதமடைந்த பகுதிகளை வலுப்படுத்த, மண்ணரிப்பை தடுக்க, கடம்பா குளம் மறுகால் ஓடை கரையோரங்களில் ஒரு லட்சம் பனை மர விதை நடும் பணியில் மதர் சமூக சேவை
நிறுவன இயக்குனரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி மிக தீவிரமாக தொடர்ந்து தினமும் ஈடுபட்டு வருகிறார்.
டாக்டர் எஸ் ஜே கென்னடி
நிறுவனர்/ இயக்குனர்,
மதர் சமூக சேவை நிறுவனம்
9488105566/9894690026






