நான்கு நாட்களுக்குப் பின்பு ஆழியாறு கவியருவியில் அனுமதி சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

பொள்­ளாச்சி:அக்-26 பொள்­ளாச்சி அடுத்த ஆனை­மலை புலிகள் காப்பகத்­திற்கு உட்­பட்ட ஆழி­யாறு கவியருவி தமிழகத்தின் முக்­கிய சுற்றுலாதலங்­க­ளில் ஒன்­றா­கும்.இங்கு பண்டிகை மற்­றும் விடுமுறை நாட்­க­ளில் அதிக அள­வில் சுற்றுலா பயணிகள் வந்து அருவி­யல் குளித்­துச் செல்­வது வாடிக்கை. இந்­நி­லை­யில் வட கிழக்கு பரு­வ­மழை துவங்­கியதால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி­களில் கன­மழை பெய்­தது.இதன் கார­ண­மாக ஆழி­யாறு கவியருவியில் காற்­றாற்று வெள்­ளம் ஆர்ப்­பரித்து கொட்­டியது.இத­னால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவி­யல் குளிக்க தற்­கா­லிக தடை விதித்­தது வனத்துறை. தற்­போது மழைபொழிவு குறைந்­த­தன் கார­ண­மாக அருவிக்கு வரும் நீரின் அளவு சீரா­னதை தொடர்ந்து வனத்­து­றை­யால் விதிக்­கப்­பட்ட தற்­காலிக தடை நீக்­கப்­பட்­டது,நான்கு நாட்­க­ளுக்­குப்பிறகு சுற்றுலா பயணிகள் கவியருவியில் குளிக்க அனு­மதி அளிக்­கப்­பட்­ட­தால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் இட்டு மகிழ்ந்­த­னர்.