ஆரல்­வாய்­மொ­ழி­யில் போக்சோ குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு!

நாகர்­கோ­வில்,-ஜூன்.24 போக்சோ வழக்கு குறித்த விழிப்­பு­ணர்வு ஆரல்­வாய் மொழி­யில் நடை பெற்­றது.

கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்­தில் போக்சோ குற்­றஙகள் இல்­லாத கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்தை உரு­வாக்­கும் பொருட்டு “நிமிர்” குழு­வி­னர் சூறா­வளி பிரச்­சா­ரத்­தில் தின­மும் தொடர்ந்து ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். கன்­னி­யாகு­மரி மாவட்டகாவல் கண்­கா­ணிப்­பாளர் டாக்­டர். ஸ்டாலின் அவர்­கள் அறி­மு­க­ப­டுத்­திய நிமிர் என்ற போக்சோ சட்ட விழிப்­பு­ணர்வு இயக்­கத்­தின் சார்­பில் தலைமை காவ­லர்­கள் ஜெயந்தி,சுயம்புமஞ்சு மற்­றும் ஆஷாபிரியா ஆகி­யோர் கொண்ட குழு­வி­னர் நேற்று ஆரல்­வாய்­மொழி காவல் நிலைய எல்­கைக்கு உட்­பட்ட பொது­மக்­கள் அதி­கம் கூடும் இடங்­க­ளுக்கு சென்று அவர்­க­ளி­டம் போக்சோ வழக்கு குறித்த சட்டவிழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தி  பொது­மக்­க­ளி­டம் துண்டு பிர­சு­ரங்­களை வழங்­கி­னர்.