திருவண்ணாமலை பயணம் குறித்த தமிழிசையின் விமர்சனத்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி பதிலளித்துள்ளார். துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்த நிலையில், தான் சென்றது கிரிவலம் அல்ல, சரி வலம் என்று உதயநிதிஸ்டாலின் பதிலளித்துள்ளார்.கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “பவன்கல்யாண் சொன்னதைப் போல,தான் செய்த தவறுகளில் இருந்து திருந்துவதற்காக உதயநிதி ஸ்டாலின் கிரிவலத்தை தொடங்கி விட்டதாக”விமர்சித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து தமிழிசைக்கு தனது எக்ஸ் பக்கத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.அதில் “ஆரியர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டி க்காட்டினால், முன்னாள் ஆளுநருக்கு கோபம் வருவதாக “குறிப்பிட்டுள்ளார்.திருவண்ணாமலையில் பக்தர்களின் வசதிகள் தொடர்பான ஆய்வுக்காக தாம் வந்ததாகவும், இதுகிரிவலம் அல்ல சரிவலம் எனவும் உதயநிதி கூறியுள்ளார்.” தங்களைப் போன்ற ம க்கள் பிரதிநிதிகளைப் பார்த்தால், மக்களால் பல முறை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும்” எனவும் உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.” தமிழிசை எவ்வளவு சத்தமிட்டாலும், அரசியலும்- ஆன்மிகமும் தமிழ் நாட்டில் என்றைக்கும் கலக்காது” எனவும், “இந்திக்கு வக்காலத்து வாங்கும் தமிழிசையின் துரோகத்தை,தமிழ் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருப்பதாகவும்”உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.முன்னதாக, கோவை விமானநிலையத்தில் பேசிய பாஜக மூத்ததலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தன்னை ‘இந்திஇசை’ என்று சமூகவலை தளங்களில் விமர்சிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.” தமிழ்த்தாய் வாழ்த்தில் சில வரிகள் விடுபட்டதில் தனக்கும் உடன்பாடில்லை” என்று தமிழிசை தெரிவித்தார்.தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் விடுமுறை விடப்பட்டதற்கும் தமிழிசை வரவேற்பு தெரிவித்தார்.”இந்தி தினத்தை வாழ்த்திப் பேசியப.சிதம்பரம் தற்போது எதிர்த்துப்பேசுவது ஏன்” என்றும் தமிழிசை சவுந்தரராஜன் வினவினார்.
சர்ச்சையான திருவண்ணாமலை கிரிவலம்…?






