பள்ளி கட்டிடம் நெல் கொள்முதல் நிலையம் மற்றும் ரேஷன் கடை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இன்று திறந்து வைத்தார்

 

ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் பள்ளி கட்டிடம் நெல் கொள்முதல் நிலையம் மற்றும் ரேஷன் கடை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இன்று திறந்து வைத்தார்

கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சி பி ஆதித்யா செந்தில் மற்றும் கூடுதல் ஆட்சித் தலைவர் சரண்யா தலைமையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி ஆனந்தன் மேற்கு ஒன்றிய செயலாளர் கே ஆர் கே கோவிந்தராஜன் ஆத்ம குழு தலைவர் தங்க ஆனந்தன் நகர செயலாளர் செல்வகுமார் எசனூர் ஊராட்சி மன்ற தலைவர் திருஞானம் ஸ்ரீமுஷ்ணம் சொசைட்டி மேலாளர் கணபதி மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் மகளிர்முன்னணியில் முன்னதாக தென்பாதி அரசு உயர்நிலைப் பள்ளியில் இரண்டு கூடுதல் வகுப்பறை சுமார் 42 லட்சம் செலவில் திறந்து வைத்தார் நினைவாக மரக்கன்று நட்டு வைத்தார் அதோடு நீண்ட நாள் கோரிக்கையாக எம்ஜிஆர் நகரில் 12 லட்சம் செலவில் ரேஷன் கடை திறந்து வைத்தார் அதோடு எசனூர் ஊராட்சியில் சுமார் சுமார் 44 லட்சம் செலவில் நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைத்தார் அதோடு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தற்பொழுது நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் பொதுமக்கள் நலன் கருதி வீடு தேடி வரும் மருத்துவம் பெண்களுக்கு இலவச பேருந்து மாதந்தோறும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய் வட பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள்ளிப்பாடி காவனூர் இடையே மேம்பாலம் இப்படியாக திமுக ஆட்சி சிறப்பு பணி நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது என புகழாரம் உரையாற்றினார்