நெல்லை, அக்.19 திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நேற்று (18.10.2024) வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர்கா.ப. கார்த்தி கேயன்,தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து, தென்னையில் பூச்சி,நோய் கட்டுப்பாடு, தென்னங்கன்று நடவு முறைகள், ஊடுபயிர்கள் சாகுபடி, நீர் மற்றும் உரம் மேலாண்மை முறைகள் குறித்து விவசாயிகள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு .பெ .சாமி நாதன் அவர்களால் தயாரிக்கப்பட்ட செயல் விளக்க கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன்,இ.ஆ.ப., அவர்கள் விவசாயிகளுக்கு வழங்கினார்கள்.மேலும், வேளாண்மைத் துறைசார்பில், தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல்திட்டத்தின் கீழ் ரூ.5000 மதிப்பிலானமின்கல விசைத்தெளிப்பான் ரூ.2500/- மானிய விலையில் ஒரு பயனாளிகளுக்கும், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப் போம் திட்டத்தின் கீழ் தலா ரூ.6000 மதிப்பில் மண்புழுஉரப்படுகை ரூ .3000 /- மானியவிலையில் 2 பயனாளிகளுக்கும், வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கத்தின் கீழ் ரூ.2,26,990/-மதிப்பிலான விசைஉழுவை இயந்திரத்தினைரூ.1,13,495/- மானிய விலையில் ஒரு பயனாளிக்கும்,தோட்டக் கலைத்துறை சார்பில் பனை மேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் மானியத்தில் மதிப்பு கூட்டப்பொருள்கள் தயாரிக்கும் கூடம் ஒரு பயனாளிக்கும், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் எழுமிச்சை பரப்பு விரிவாக்கத்திற்காக ரூ . 2 , 6 4 0 /- மானிய விலையில் ஒரு பயனாளிக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா,சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) கிருஷ்ணகுமார், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
நெல்லை கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்






