பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி முடிவுற்ற பல்வேறு திட்ட பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி முடிவுற்ற பல்வேறு திட்ட பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

திருவெறும்பூர்: அக்16

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது தொகுக்குட்பட்ட முடிவுற்ற பணிகளான வேங்கூர் ஊராட்சியில் உள்ள அசோக் நகரில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் பயன்பெறும் வகையில் 2023 -24 ஆம் நிதியாண்டின்கீழ் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 16 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டமேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

மேலும் இதே போல்கிளியூர் ஊராட்சி ராசாம்பேட்டை பகுதியில் 2023 -24 ஆம் ஆண்டு நிதியாண்டின் கீழ் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

மேலும் இதனை அடுத்து கிளியூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 14 லட்சத்தி முப்பதாயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தையும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் திறந்து வைத்து குழந்தைகளிடம் உரையாற்றினார்

மேலும் இதே போல் கிருஷ்ண சமுத்திரம் ஊராட்சி குமரேசபுரம் பகுதியில் உய்யக்கொண்டான் வாய்க்காலின் குறுக்கே நடுவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஒரு கோடியே 91,30,000 மதிப்பீட்டில் உள்ள புதிய பாலத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

மேலும் இதனையடுத்து பத்தாளபேட்டை ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 13 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய நியாய விலை கடையையும் செட்டியார் பேட்டை அருகே நாச்சி அம்மன் கோவில் பகுதியில் 16 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கிளி வாய்க்கால் பாலத்தையும் திறந்து வைத்தார்

மேலும் இந்நிகழ்வில் திட்ட இயக்குனர் கங்காதரணி திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாசம், திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நரசிம்மன் ,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், திருவரம்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி ஒன்றிய குழு தலைவர் சத்யா கோவிந்தராஜ் ,பத்தாளபேட்டை ஊராட்சி மன்ற தலைவர் ரீனா ஜவான் கிளாரட், கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்களை ஏராளமானோர் கலந்து கொண்டனர்.