48 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து 10 இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! கனடாவில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா!!

டெல்லி, அக். 16–ஒரேநாளில் அடுத்­தடுத்து 10 இந்­திய விமானங்க­ளுக்கு வெடிகுண்டு மிரட்டல்­கள் விடுக்­கப்­பட்­டுள்­ளன.இத­னால் இந்த விமானங்கள் அவ­சர அவ­ச­ரமாக பல்­வேறு விமான நிலை யங்­களில் தரை­யி­றக்­கப்­பட்­டன.டெல்லியில் இருந்து சிகா­கோ­விற்கு சென்ற விமானம் வெடி­குண்டு மிரட்­ட­லால் அவ­சரமாக கனடாவில் தரையிறக்கப் பட்டது. இதனால் பயணிகள், கடும் சிரமத்திற்குள்ளாகினர்.  அண்­மைகாலமாகவே  பள்ளிகள்­, விமான நிலைங்கள்,விமானங்­கள் எனமக்­கள் கூடும் இடங்­க­ளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்­ப­வம்அதி­க­ரித்து வருகி­றது. போலி­யாக இது போன்று விடுக்கப்­ப­டும் மிரட்­டல்­களால் பொது­மக்­கள் மத்­தியில் பெரும் அச்­ச­மும் பரபரப்பும் ஏற்­படுகி­றது. இத­னி­டையே,ஒரே நாளில் அடுத்­த­டுத்து 710 இந்­திவிமானங்­களுக்கு வெடி­ய குண்டு மிரட்­டல் விடுக்­கப்­பட்­டுள்­ளது. இது குறித்த விவரம் வருமாறு:மும்பையில் இருந்து புறப்பட்ட 3 சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன எக்ஸ் தளம் வாயிலாக இந்த மிரட்டல்கள் எடுக்கப்பட்டன. அதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விமானங்கள் அவசர அவசரமாக திருப்பி விடப்பட்டு அருகில் உள்ள விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டன.48 மணி நேரத்துக்குள் 10க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு இப்படி வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. டெல்லி சிகாகோ விமானம், டாமன் லக்னோ இண்டிகோ விமானம், அயோத்தியா பெங்களூர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், தர்பங்கா மும்பை இடையே இயக்கப்படும் ஆகாஷா ஏர் விமானம், பகதோஹ்ரா டூ பெங்களூர் விமானம், அமிரசரத்தில் இருந்து டேராடூன் மற்றும் டெல்லிக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்கள், மதுரை டூ சிங்கப்பூர் சென்ற விமானங்கள், ஆகியவற்றிற்கு வெடிகுண்டு விடுக்கப்பட்டன. முன்னதாக நேற்று முன்தினம் இரண்டு இண்டிகோ விமானம் மற்றும் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. அடுத்தடுத்து இந்த வெடிகுண்டு மிரட்டல்களால் விமான பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விமானங்கள் அவசரமாக பல்வேறு ஏர்போர்ட்களிலும் தரையிறக்கப்பட்டது. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல்கள் அனைத்தும் வெறும் புரளி என தெரிய வந்தது.டெல்லியில் இருந்து சிகாகோவிற்கு சென்ற விமானம் கனடாவில் உள்ள இகாலியூட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேற்கு வங்க மாநிலம் பக்டோக்ராவில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.இதை அடுத்து பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமானத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது மதுரையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமும் வெடிகுண்டு மிரட்டல் வந்த விமானங்களில் அடங்கும்.அந்த விமானம் சிங்கப்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.