ரேசன் பொருட்கள் வாங்கும் போதும், எரி வாயு சிலிண்டர் பதிவு செய்யும் போதும், வங்கி
பரிவர்த்தனை மேற் கொள்ளும் போதும் அதனை உறுதிப்படுத்த வும், வெளிப்படைத் தன்மைக்கு பொறுப் பேற்கும் வகையிலும் உடனடியாக பயனாளரின் பதிவு செய்யப்பட்ட அலைபேசிக்கு குறுஞ் செய்தி அனுப்பப்பட்டு வருகிறது.
அதே போல் வாக்காளர்கள் தங்களின் வாக்குப்பதிவில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், ஒருவர் தன் வாக்கை பதிவு செய்தவுடன் அதை உறுதிப்படுத்தும் வகையில்,
வாக்காளரின் அலை பேசிக்கு குறுஞ்செய்தி வரும் (vote confirmationsms) திட்டத்தைசெயல்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கடந்த 2 ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. மேலும், கள்ள வாக்குகள் பதிவாவதை தடுக்கும் வகையில், குறுஞ்செய்தி அனுப்புவதை உறுதிப்படுத்தும் இந்த நடைமுறை குறித்து பரிசீலித்து வருவதாக முதலில் கூறிய தேர்தல் ஆணையம் அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
எனவே, 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் மற்றும் கடந்த பிப்ரவரி மாதம் அளித்த மனுக்கள் மீது இந்திய தேர்தல் ஆணையமோ அல்லது தமிழக தலைமை தேர்தல் அதிகாரியோ எந்த நடவடிக்கையும் எடுக்காததால், உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டுமென தமிழ்நாடு இசை வேளாளர்கள் இளைஞர் நலச்சங்கத்தின் தலைவர் கே.ஆர்.குகேஷ் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுளளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை வரும் சூழலில்,மனு சென்னை உயர் நீதி மனறத்தில் தலைமை நீதிபதி தர்மா திகாரி தலைமையிலான அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படு கிறது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23-ந் தேதிவாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் அதாவது திங்கட்கிழமை
(மார்ச் 30) த ொடங்குகிறது. மேலும், ஏப்ரல் 23- ந் தேதி பதிவான வாக்கு கள் மே 4-ந் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப் படவுள்ளன.






