கோவை, அக்.16- 10, 11 , 12 ம் வகுப்புக்களுக்கான பொதுத் தேர்வுகால அட்டவணையை அமைச்சர்
அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார்.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில்
20 24 25 கல்வியாண்டின் பொதுத்தேர்வு அட்டவணையை கோவை கலெக்டர் அலுவலகத்தில்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது :12ம் வகுப்பு பொதுத் தேர்வு 2025ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதியும், 11ம் வகுப்புபொதுத் தேர்வு மார்ச் 5ம் தேதிதொடங்கி மார்ச் 27ம் தேதியும், 10ம்வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28ம்தேதி தொடங்கி ஏப்ரல் 15ம் தேதியும் முடிவடைகிறது.12ம் வகுப்பு அட்டவணை 3.3.2025 மொழிப்பாடம் 6 ந் தேதி ஆங்கிலம் 11 ந் தேதி கணிதம், விலங்கியல்,வணிகம் , மைக்ரோ பயலாஜி ,நியூட்டிரிஷன், டெக்ஸ்டைல், புட்சர்வீஸ் மேனேஜ்மெண்ட், விவசாய அறிவியல்14 ந் தேதி கணினி அறிவியல்,கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், பயோகெமிஸ்ட்ரி, புள்ளியியல், அரசியல்அறிவியல்18 ந் தேதி உயிரியல், தாவரவியல்,வரலாறு, வணிக கணிதம்2 1 ந் தேதி வேதியியல்,கணக்குப்பதிவியல், புவியியல் 25 ந் தேதி இயற்பியல், பொருளாதாரம் 11ம் வகுப்பு அட்டவணை 5.3.2025 மொழிப்பாடம் 10 ந் தேதி ஆங்கிலம் 13 ந் தேதி கணினி அறிவியல்,கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், பயோகெமிஸ்ட்ரி,புள்ளியியல் 17 ந் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் 20 ந்தேதி இயற்பியல், பொருளாதாரம் 24 ந் தேதி கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயலாஜி 2 7 ந் தேதி வேதியியல் கணக்குப் பதிவியல், புவியியல் 10ம்வகுப்பு அட்டவணை 28.3.2025 தமிழ்ஏப்ரல் 2 ந் தேதி ஆங்கிலம் 7 ந் தேதி கணிதம் 11 ந் தேதி அறிவியல் 15 ந் தேதி சமூக அறிவியல4 ந் தேதி தேர்வு செய்த மொழிப்பாடம் செய்முறைத் தேர்வுகள்“பிளஸ் 2 செய்முறைத் தேர்வு அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி 7-ல் தொடங்கி பிப்ரவரி 14-ல்முடிவடைகிறது. பிளஸ் 1 செய்முறைத்தேர்வு பிப்ரவரி 15 ல் தொடங்கி பிப்ரவரி 21 ந்தேதி நிறைவடையும்,10ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 22 தொடங்கி 28ம் தேதி நிறைவுபெறுகிறது.ரிசல்ட் எப்பொழுது?12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 2025 மே 9ம் தேதியும், 11ம் வகுப்புமற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 19ம் தேதியும் வெளியாகும்
என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார்.தொடர்ந்து பேசிய அமைச்சர்,தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுவிட்டதால் மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும்.மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர் கொள்ள பொறுப்புடன் தயாராக வேண்டும், தேர்வுக்கு அஞ்சக் கூடாது. மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்என்று ஊக்கமளித்தார்.
12–ம் வகுப்பு தேர்வு மார்ச் 3–ந் தேதி துவங்குகிறது 10, 11, 12–ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் அட்டவணை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்






