“அதிதீவிர மழைக்கு வாய்ப்பு; விளைவுகளை எதிர்கொள்ள அரசு தயார்” துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின

சென்னை:“அடுத்து வரும் நாட்­க­ளில் தமிழ்­நாட்­டில் அதி­தீ­விர கன­மழை பெய்­யக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­ ப­டு­கி­றது. இதற்­கானஅனைத்து முன்­னெச்­சரிக்கை நட­வ­டிக்­கைகளை­யும் தொடர்ந்து எடுத்து வரு­கி­றோம்.இதில் பொது­மக்­க­ளின் உயி­ரும்.உடைமைகளும் காக்­கப்­பட வேண்டும் என்­பது தான் முதல் முக்­கி­யத்­து­வம் அதைமன­தில் வைத்தே பணி­கள் மேற் கொள்­ளப்­பட்டு வரு­கி­றது.”என்றுதுணைமுதல்­வர் உத­ய­நிதி ஸ்டாலின் தெரி­வித்­துள்­ளார். வட­கி­ழக்கு பரு­வமழை முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கைகள் குறித்து மாநக­ராட்சி தலைமை அலு­வலகத்­தில் உள்ள ஒருங்­கிணைந்த கட்­டுப்­பாட்டு மையத்­தில் துணை முதல்­வர் உத­ய­நிதி ஸ்டாலின் நேற்று(ஞாயிற்­றுக்­கி­ழமை ) நேரில் ஆய்வு மேற்­கொண்­டார்.மேலும்,பெரு­நகர சென்னை மாநக­ராட்­சிப் பகு­தி­க­ளில் மேற்கொள்ளப்­பட்­டுள்ள முன்­னேற்­பாடு மற்­றும் தயார்­ நி­லை­யில் வைக்­கப்­பட்­டுள்ள பணி­களை ரிப்­பன் கட்­டடவளா­கத்­தில் உள்ள ஒருங்­கி­ணைந்த கட்­டளை மற்­றும் கட்­டுப்­பாட்டு மையத்­தில் இருந்து கண்­கா­ணிக்­கப்­பட்டு நட­வ­டிக்கை மேற் கொள்­ளப்­ப ­டுவதை பார்­வையிட்டு ஆய்வு மேற்கொண்­டார். தொடர்ந்து 1913  கட்டுப்­பாட்டு மையத்­தில் ­ பொது­மக்­க­ளி­ட ­மி­ருந்து  வரப்­பெற்ற புகாருக்கு தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசி ஆய்வு மேற் கொண்­டார். தொடர்ந்து வரப்­பெற்ற புகா­ருக்கு தகுந்த நட­வடிக்கை மேற்கொள்ள அலு­வலர்­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­னார்.பின்­னர் செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பில் அவர் தெரி­வித்­ததா­வது: வட­கி­ழக்­குப்பரு­வ­மழை நிலை­யில் தொடங்­க­வுள்ள அதற்­கான முன்னேற்­ பாட்­டுப் பணிகளை, தமிழ்­நாடு அரசுதுரி­த­மாக நட­வ­டிக்கை மேற்கொண்டு வரு­கி­றது. மேலும், வட­கி­ழக்­குப் பரு­வ­ம­ழை யை எதிர்கொள்­வ­தற்­காக வரு­வாய்த்­துறை மற்­றும் பெரு­நகர சென்னை மாநக­ராட்­சி­யின் சார்­பில் மாநில அவசர கால கட்­டுப்­பாட்டு மையம் அமைக்­கப்­பட்­டுள்­ளது.இந்த மையத்­தில் மேற்­கொள்­ளப்­ப­டும் கண்­காணிப்பு நட­வ­டிக்­கைகள் இன்­றைய தினம் ஆய்வு மேற்கொள்­ளப்­பட்­டது.இந்­திய வானிலைஆய்வு மையத்­தின் எச்­சரிக்­கை­யின் அடிப்­ப­டையில், அடுத்து வரும் நாட்­க­ளில் தமிழ்­நாட்­டில் அதி­தீ­விர கன­மழை பெய்­யக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அதா­வது  20 செ.மீக்கு மேலான மழைப் பொழிவு இருக்­கும் என்றுவானிலை மையம் கூறி­யுள்­ளது.இதற்­கான அனைத்து முன்­னெச்­சரிக்கை நட­வ­டிக்­கைகளை­யும் தொடர்ந்து எடுத்து வரு­கி­றோம்.இதில் பொது­மக்­க­ளின் உயி­ரும். உடைமைகளும் காக்­கப்­பட வேண்டும் என்­பது தான் முதல் முக்­கி­யத்­து­வம் அதைமன­தில் வைத்தே பணி­கள் மேற் கொள்­ளப்­பட்டு வரு­கி­றது. மழைக்­காலத்தில் பொது­மக்­க­ளுக்­கான பிரத்யேக உதவி எண்ணாக 1913  வழங்­கப்பட்­டுள்­ளது. இதற்­கான கட்­டுப்­பாட்டு அறை­யில் மொத்­தம் 150 நபர்­கள் 4 சுழற்சி முறை­யில் பணி­பு­ரிந்து வரு­கி­றார்­கள்.அவர்­கள் பொது­மக்­க­ளுக்­குத் தேவை­யான தகவல்­களை உட­னுக்­கு­டன் வழங்­கு­வார்­கள். அவசரஉதவி எண் தவிர, சமூகஊட­கம் (Social Media),வாட்ஸ் ஆப் நம்ம சென்னை தளம் போன்­றவற்­றி­லும் மழை பற்­றிய தகவல்­கள் உட­னுக்கு­டன் வழங்­கப்­ப­டும்.மேலும்,அர­சு­டன் இணைந்து செயல்­ப­டு­வதற்கு 13 ஆயி­ரம் தன்­னார்­வலர்­கள் தயார் நிலையில் உள்­ள­னர். தாழ்­வானபகு­தி­க­ளில் தண்­ணீர் தேங்­கி­னால் வெளி­யேற்­று­வதற்­காக 100 குதி­ரைத்திறன் கொண்ட 100 எண்ணிக்­கை­யி­லான மோட்­டார் பம்­பு­கள் தாழ்­வானபகு­தி­க­ளில் தயார்­நி­லையில் வைக்­கப்­பட்­டுள்ளன.மழை நீர் தேங்­கக்­கூ­டி­ய வை என்று கண்­ட­றிப்­பட்­டுள்ள 31 இர­யில்வே கல்­வெட்­டு­கள் ஆழ­மாக சுத்­தம்செய்யப்­பட்­டுள்­ளன. பெரு­நகர சென்னைமாநக­ராட்­சி­யின் அனைத்து வார்­டு­க­ளி­லும் நிவா­ரணமையங்கள் அமைக்­கப்­பட்­டுள்ளன.அந்­தந்த பகு­தி­க­ளில் உள்ள சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் அந்த நிவா­ரணமையங்­க­ளுக்கு தேவையான உணவு, குடி­நீர் உள்ளிட்ட அடிப்­ப­டைத்தேவைகளை அரசு அலு­வலர்­க­ளு­டன் ஒருங்­கி­ணைந்து செயல்­பட்டு உறுதி செய்து நிறைவேற்றி தரு­வார்­கள். இது­மட்­டு­மன்றி தமிழ்­நாடு அர­சின் சார்­பில் “TNALERT”என்ற புதிய செய­லி­யும் உரு­வாடுக்­கபட்­ள்­ளது. பொது­ மக்கள் இந்த செய­லியை பதி­வி­றக்கம் செய்து மழைபற்­றிய தகவல்­களை உடனுக்­கு­டன் ­­அறிந்துகொள்­ள­லாம்.பல்­வேறு வானிலை மாதி­ரி­களைப் பயன்­ப­டுத்தி, வெள்­ளப்­பெருக்கு ஏற்­ப­டக்­கூ­டிய அனைத்­துப் பகு­தி­க­ளும் தொடர்ந்து கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­கி­றது. தற்­போது மழை­நீர் வடி­கால் பணி­கள் நிறைவு பெறா­மல் உள்ள ஓரிரு இடங்­க­ளில், அவற்றை சுற்றிபாது­காப்பு வேலி­கள் அமைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. பொது­மக்­க­ளின் பார்­வைக்கு அப்­படி ஏதா­வது மூடப்­ப­டா­மல் இருக்­கும் கழி­வு­நீர்பாதைகள் பற்றி தகவல் தெரிந்­தால்,அதனை மாநக­ராட்­சிக்கு ட்விட்­டர் போன்ற தளங்­க­ளில் தெரி­விக்­க­லாம். அதன்மீது உட­ன­டி­யாக நட­வடிக்கை எடுக்­கப்­ப­டும்.தரை­யின் மேலே கிடக்­கும் அனைத்து கேபிள்­க­ளை­யும் மூடு­வதற்கு தேவை­யான அறி­வு­றுத்தல்கள் மின்சாரத்­து­றைக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன.தாழ்­வான மின்­மாற்­றி­கள் அதிக உய­ரத்­திற்கு மாற்­றப்­பட்­டுள்­ளன.மற்றமாவட்­டங்­க­ளில் இருந்துகூடு­தல் மின்­சா­ரத்­துறை ஊழி­யர்­கள் வர­வழைக்­கப்­பட்­டுள்­ள­னர்.எனவே பொது­மக்­கள் பாதிப்­ப­டை­யாத வண்­ணம்அனைத்து நட­வ­டிக்­கைகளும் அரசு தரப்­பில் அலு­வலர்­கள், மாநக­ராட்­சிப்பணி­யா­ளர்­கள் மேற்­கொண்டு வரு­கின்­றனர்.சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் கோரிக்­கைகளை ஏற்று சென்­னைப் பெரு­நகர் குடி­நீர் வழங்­கல் மற்­றும் கழி­வு­ நீ­ர­கற்று வாரி­யத்­தின் 356 நீரேற்று நிலை­யங்­க­ளும் ஜெனரேட்­டர்­கள் மூலம் இயங்கும் வகை­யில் உறு­தி­ செய்­யப்­பட்­டுள்­ளது.ஜெட்­ரா­டிங்,தூர்­வா­ரும் இயந்­தி­ரங்­கள் சூப்­பர்சக்­கர் உள்­ளிட்ட373இயந்­தி­ரங்­கள் வர­வழைக்­கப்­பட்­டுள்­ளன. மேலும்,இந்­தப் பணி­க­ளில் கூடு­தலாக 83 கழி­வு­ நீ­ர­கற்­றும் வாகனங்­க­ளும் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.இந்த மழை நே­ரத்­தில் தமிழ்­நாடுஅரசு தரு­கின்ற வழி­காட்­டு­தல்­க­ளை­யும் முறை­யா­கப் பின்­பற்றி பொது­மக்­க­ளும் அர­சுக்கு ஒத்­து­ழைப்பு அளிக்கவேண்டும். மேலும் ஊட­க­வி­ய­லா­ளர்­கள்,பத்­தி­ரி­கையா­ளர்கள்­ பொறுப்­பு­டன் மக்­க­ளுக்கு  விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்தும் வண்ணம் செய்­திகளை வெளி­யிடவேண்டும் நாம் அனைவ­ரும் கரம் கோர்த்து,இந்தமழைக்­காலத்­தில் நம்மக்­க­ளின் பாது­காப்பை உறுதி செய்வோம். இவ்­வாறு அவர் கூறி­னார்.