ஜி7 நாடுகள் கடும் எதிர்ப்பு-அணு ஆயுதம் தயாரிக்க ஈரானுக்கு மட்டும் தடை ஏன் ?

டெஹ்­ரான், ஜூன்.18 இஸ்­ரே­லுக்­கும் ஈரா­னுக்­கும் இடையே நிலவி வந்த மோதல் தற்­போது முழு அள­வி­லான போராக வெடித்­துள்­ளது.இது மத்திய கிழக்கில் இருநாடு­க­ளுக்­கி­டையே உருவாகும் சண்­டை­க­ளைப் போல அல்ல. அதை­விட பல ம­டங்கு ஆபத்­தா­ன ஒன்­றாக பார்க்­கப்­படுகி­றது. இஸ்­ரேல் ஈரான் இடை­யி­லான இந்த போர் மத்திய கிழக்­கில் மிக­வும்­ப­தற்­ற­மான சூழலை ஏற்­ப­டுத்திஉள்­ளது.தற்­போது வரை இருநாடு­க­ளும் மாறி மாறி தாக்­கிக் கொண்டிருக்­கும் சூழ­லில் இதுவரை நூற்­றுக்க­ணக்­கான உயிர்­கள்­பலியாகியிருக்­கின்­றன.தற்­போதுவரை ஏற்­பட்­டுள்ள
உயிரிழப்பு­க­ளில்கிட்டத்­தட்ட 90 சத­வீ­தம் பொதுமக்­கள்­என்­பது மிக­வும் துய­ர­மான ஒன்று. உலக நாடு­கள் பல­வும் இந்த பதற்­றத்­தைக்குறைக்க தம்­மால் ஆன முயற்­சி­களை முன்­னெடுத்து வருகின்­றன. இந்த சூழலில் அணு ஆயு­தத்தை ஈரான் தயா­ரிக்­கவே கூடாது என்று ஜி7 நாடு­கள்,  திட்­ட­ வட்­டமா­க­ தெ­ரிவித்­துள்­ளன.ஆனால் இந்தஅமைப்பில் உள் அமெ­ரிக்கா, இங்கி­லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடு­கள் அணு ஆயு­தங்­களை குவித்து வைத்து இருக்­கும்­ போது ஏன் ஈரானை மட்­டும் தயாரிக்க கூடாது? என்று சொல்­கி­றார்­கள் என்ற கேள்வி அனைவருக்­கும் எழு­கி­றது.அணு ஆயு­தம் என்­பது பேர­ழிவை ஏற்­படுத்தும் ஒரு ஆயுதம் ஆகும்.எனவே 1968ம் ஆண்டு அணு ஆயுத பர­வல் தடுக்­கும் ஒப்­பந்­தம் கொண்டு வ­ரப்­பட்­டது. இந்த ஒப்­பந்­தம் வருவ­தற்கு முன்பே, அமெ­ரிக்கா,ரஷியா, பிரான்ஸ், இங்­கி­லாந்து, சீனா ஆகியநாடு­கள் அணு ஆயு­தத்­தை­ த­யாரித்து விட்டன. எனவே இந்த நாடு­களுக்கு மட்­டும் அதில் விதிவி­லக்கு அளிக்­கப்­பட்டு, மற்ற நாடு­கள் அதில் இணைய வேண்­டும் என்று வற்­புறுத்­தப்­பட்­டன.ஆனால் சீனாவி­டம் அணு ஆயு­தம் இருப்­பதால், இந்தியா நாங்­கள் கட்­டா­யம் அணு ஆயு­தங்­கள் தயாரிப்­போம் என்று கூறி, இந்த ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்தி­ட­ ம­றுத்து விட்­டது.நம்மை கார­ணம் கூறி பாகிஸ்­தா­னும் அதில் கையெ­ழுத்து போட­வில்லை.இஸ்­ரேல் ஆரம்­பத்தி­லேயே இதனை மறுத்து­ விட்­டது. வட­கொரியா இந்த ஒப்­பந்­ததை முத­லில் ஏற்­றுக்கொண்டு 2003 ல் அதில் இருந்து விலகிவிட்­டது.மற்ற உலக நாடு­கள் அனை த்தும் அதில் கையெழுத்து போட்டுள்­ளன.தற்­போ­தைய நிலையில் ரஷியாவி­டம் 5,459, அமெ­ரிக்­கா­வி­டம் 5,177 என்ற அதிக எண்ணிக்­கை­யிலும்,அதற்கு அடுத்­த­ படி­யாக பிரான்ஸ் 290,இங்­கிலா ந்து 225, சீனா 600, இந்தியா 190,பாகிஸ்­தான் 180, இஸ்­ரேல் 90,வட­கொ­ரியா 50 ஆகிய எண்ணிக்­கையில் அணு ஆயு­தங்­கள் இருக்­கின்­றன.ஈரானை பொறுத்­தவரை அணு ஆயுத பரவல் ஒப்­பந்­தத் தில் கையெ­ழுத்திட்டு உள்ளது. அதன் கார­ணமாக அமெ­ரிக்கா, மின்­சா­ரம் உள்ளிட்ட பல்­வேறு வளர்ச்சி பணிக­ளுக்காக ஈரானுக்கு அணு ஆயுத செறிவூட்­டல் உ­தவி­களை வழங்கியது. அமெ­ரிக்­கா -ஈ­ரான் ஆனால் 1978ம் ஆண்டு ஈரானில் நடந்­த­ இஸ்­லாமிய புரட்­சிக்கு பிறகு அமெ­ரிக்­கா-­ஈ­ரா ன் உற­வில் முறிவு ஏற்­பட்டு அணு­சக்தி உத­வியில் இருந்து அமெ­ரிக்கா பின்­வாங்கியது. இருந்­தா­லும், ஈரான், தன்னிச்­சை­யா­க­த­னது அணு­சக்தி திட்­டத்தை விரிவாக்க தொடங்கி­யது. ஆனால் ஈரான் அணுவை ஆயு­த­மாக மாற்­றுகி­றதா? என்று உலக நாடு­க­ளுக்கு சந்­தே­கம் ஏற்­பட்­டது.எனவே அமெ­ரிக்கா,ரஷியா, பிரான்ஸ், இங்­கி­லாந்து, சீனா ஆகிய நாடுகள் மட்டும் இணைந்து ஈரானு­டன் ஒருபுதிய அணு­சக்தி திட்­டத்தை கட்­டுப்­படுத்துவது தொடர்­பான ஒப்­பந்­ததை 2015ம் ஆண்டு செய்து கொண்­டன. அதில் ஈரான் கையெழுத்திட்­ட­தால், அந்த நாடு மீது­ ஏற்­கனவே விதிக்­கப்­பட்டு இருந்த அனைத்து பொரு­ளா­தார தடை­க­ளும் விலக்கி கொள்­ளப்­பட்டன. இந்த ஒப்­பந்­தத்­தின்­படி, ஈரான் தனது யுரே­னியம் செறிவூட்டும் செயல் ­பாட்டை குறைத்துக்­கொள்ள வேண்டும். சர்­வ­தேச அணு அயுத முகமையை ஆய்வு செய்ய அனுமதிக்­க­ வேண்டும். அணுஆயுதம் உ­ருவாக்­கவே கூடாது என்று கூ­றப்­பட்­டது.இந்த சூழ் நிலையில்­ இந்த ஒப்­பந்­தத்தில் இருந்து அமெ­ரிக்கா மட்­டும் 2018ம் ஆண்­டு­ தன்னிச்­சை­யாக விலகி யது.  அதாவது ஒப்­பந்­தத்தை மீறி,ஈரான் அணு ஆயு­தங்­களை தயாரிப்­ப­தாக அமெ­ரிக்கா குற்­றம்­சாட்­டியது. அதனைஉறுதி.செய்யும்வகை­யில் 2020ம் ஆண்டு முதல் ஈரான் சர்­வ­தேச அணுஅயுத ஏஜென்சியின் ஆய்­வுக்கு அனுமதி மறுத்­தது. அத­னால் ஈரான்­ அணு ஆயு­தத்தை தயாரிக்க தொடங்கி­விட்­டது என்று உலகநாடு­கள்­ உறுதி செய்து விட்­டன.ஜி7 நாடு­கள் ஈரானை மட்டும் ஏன் தயாரிக்ககூடாது? என்­ப­தற்கு பல்­வேறு காரணங்­களை ஜி7 நாடு­கள் கூறுகின்­றன.அதாவது ஆயுத பர­வல் தடை சட்­டத்தில் ­கையெ­ழுத்து போட்டு விட்டு அதனை மீறு­வது முற்­றிலும் தவறு.மேலும் ஈரான் ஒரு ஜனநாயக நாடு இல்லை. ஈரான் அரசு இஸ்புல்லா மற்­றும்­ஹமாஸ் ஆகிய பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளுக்கு ஆத­ரவு அளிக்­கி­றது.இந்த அமைப்பு­கள் இஸ்­ரேல் மட்­டுமின்றி சவுதிn அரே­பியாவிலும் தாக்கு­தல் நடத்தி இருக்­கி­றார்­கள்.ஈரான் அணு அயுதம் தயாரிக்க அனு­மதிக்­கக்­கூ­டாது என்று இஸ்­ரேல்­மட்டு மல்ல,சவுதி அரே­பியா, ஐக்கிய அரபு அமீர­கம் உள்ளிட்ட சில மத்திய கிழக்கு நாடு­கள் திரைக்கு பின் தீவி­ரமாக எதிர்க்­கின்­றன.அதோடு பயங்­க­ரவாத அமைப்பு­க­ளுக்கு அணு ஆயு­தம் சென்று­ விட்­டால் உலகை பேரழி வுக்கு கொண்டு சென்று விடும் என்று­ கா­ர­ணம் சொல்கின்­றனர்.ஆனால் ஈராளை பொறுத்­த­வரை அணு ஆயு­தங்­களை தடுக்க விரும்புகி­றோம் என்றுநீங்­கள் சொன்­னால், உல­கம் முழுவதும் ஒரு­ மித்தபோக்­கு­டன் நடக்க வேண்டும்.ஒருவருக்கு உரிமை, மற்­றொ­ருவ­ருக்கு தடை என்­றால், அது நியாயம் அல்ல. இஸ்­ரேல் அணுஆயு­தம் வைத்திருக்­கும்­ போது, நாங்­கள் ஏன்தயாரிக்க கூடாது என்று கேள்வி எழுப்­புகி­றது.இஸ்­ரே­லின் தாக்­கு­த­லை யும், ஆக்­கி­ரமிப்பு­க­ளை­யும் அணு ஆயு­தங்­கள் இன்றிதடுக்க முடியாது எனஈரான் மிக உறுதியாக நம்புகி­றது.ஈரானின் மிக முக்­கிய ராணுவ­த­லைவர்­கள்,அணு ஆயுத விஞ்­ஞானி­கள், உயர்­மட்ட ஜென­ரலகள் போன்­றோர் இஸ்­ரேலின் ஏவு­கணைதாக்­கு­த­லில் உயிரிழந்துள்­ளனர்.மிக­முக்­கியமாக ஈரான் கடு­மையா­ன ­சே­தங­க­ளைச் சந்தித்துள்­ளது.எனவே,இந்த இழப்பு ஈரானின் போர் உத்­தியை மாற்­ற­லாம் என சர்­வ­தேச அர­சியல் வல்­லுநர்­கள் நம்புகின்­றனர்.சரியானகட்­ட­மைப்பு­க­ளும், சரியான பிர­திநிதி­க­ளும் இல்­லாமல் இஸ்­ரே­லின் கடு­மை­யான தாக்­கு­த­லைஈ­ரான் எப்­ப­டிச்சமாளிக்­கும் எனகேள்வி எழுப்பும் அவரகள், ஈரானின் எ­திர்­கால மற்­றும் நம்­ப­கமான தடுப்­பாக அணு ஆயு­தங்­க­ளா­கத்­தான் இருக்­கும் என்று தெரி­விக்­கின்­ற­னர்.