ஸ்ரீ முப்பிடாதி அம்மன் கோவில் புதிய கட்டுமான பணி நடத்திட பாலாலய பூஜை நடைபெற்றது

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி மாவடி தெருவில் அமைந்துள்ள கேட்டவரம் அருளும், அருள்மிகு ஸ்ரீ முப்பிடாதி அம்மன் கோவில்  இக்கோவிலுக்கு புதிய கட்டுமான பணி நடத்தி, கும்பாபிஷேகம் நடத்த மாவடித்தெரு மக்கள் முடிவு எடுத்த நிலையில் அதன் ஆரம்பம்மாக கடந்த 27.7.2024 சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் சிற்பி மணிகண்ட ஸ்தபதி தலைமையில் மாவடி தெரு மக்கள் முன்னிலையில் வாஸ்து பூஜை சிறப்பாக நடைப்பெற்றது. இதை தொடர்ந்துநேற்று 31.07.2024 மாலை 6.00 மணியலவில் ஸ்தபதி மணிகண்டன்  தலைமையிலான குழுவினர் பாலாலய பூஜை நடைபெற்றது, பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பூஜையை சிறப்பித்தனர் தொடர்ந்து கோவில் கட்டிட வேலைகள் தொடங்கப்படும் என்று கும்பாபிஷேக விழா கமிட்டியிளார்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *