தூத்துக்குடி :தமிழக வெற்றி கழக மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் எனதலைவர் விஜய் அறிவித்துள்ளார்.இதை தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் மாநாடு வெற்றி பெறுவது குறித்து தமிழகத்தி ல் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாநாடு ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மணி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது . . ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்த அஜிதாஅக்னலுக்கு ஆள் உயர மாலை அணிவித்தும் சால்வை வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இக்கூட்டத்திற்கு மாவட்டபொறுப்பாளர் அஜிதா அக்னல் தலைமை தாங்கி அவர் பேசும் போது, தாங்கள் எப்போது எழுச்சியை பார்க்கும் போது 2026 யில் நாம் ஆட்சியைப் பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கை வந்துள்ளது ஆகையால் தொடர்ந்து தொண்டர்கள் உற்சாகத்துடன் உழைக்க வேண்டும் என்றார்.மேலும் தளபதியின் இந்த மாநாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்வோம் இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார் . இந்த ஆலோசனை கூட்டத்தில் 1000 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதைத் தொடர்ந்து அஜிதா அக்னல் செய்தியாளரிடம் பேசும் போது மாநாட்டிற்கு வருகை தரும்அனைவரிடமும் ஆதார்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை வாங்கப்பட்டு மாநாட்டில் அனைவரும் பத்திரமாக சென்று கலந்து ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. விட்டு திரும்பும் படியாக மாநாட்டில் கலந்து கொள்ளும் ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் தனித்தனியாக தங்குவதற்கும் வசதிகள் செய்யப் பட்டுள்ளது மேலும் தளபதியின் மாநாடு தளபதியின் நாடாக தமிழ்நாடுஅமையும் என அஜிதா ஆக்னல் தெரிவித்தார்.
தளபதியின் மாநாடு தளபதியின் நாடாக தமிழ்நாடு அமையும் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் பேச்சு






