தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்!

மதுரை:
தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்­கப்­ப­டுவதை தடுக்­கக் கோரிய வழக்கில் மாசுக் கட்டுப்­பாட்டு வாரியம் பதிலளிக்க மதுரை உயர் நீதி­மன்­றக் கிளை உத்­த­ரவிட்­டுள்­ளது.தூத்­துக்குடி மாவட்­டம் செய்­துங்க­நல்லூ­ரைச் சேர்ந்த காம­ராசு, 2018ல் உயர் நீதி­மன்ற மதுரை அமர்வில் தாக்­கல் செய்த மனு­வில், ‘திரு­நெல்­வேலி மாவட்­டம் தாமிரபரணி ஆற்றின் கரை­யில் பழமையான மண்­டபங்­கள், படித்­து­றைகள் ஏரா­ள­மாக உள்­ளன.இவற்றை பழமை மாறா­மல் புதுப்­பிக்கு ­மா­றும், ஆற்றில் கழிவுநீர் கலப்­பதை தடுத்து, சுத்­திகரிப்பு நிலை­யங்­கள் அமைக்­க­வும், ஆற்றை தூய்­மை­யாக பரா­ம­ரிக்கு­ மா­றும் உத்­த­ரவிட வேண்டும்’
எனக் கூறியிருந்­தார்.இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவா­மி­நா­தன், புக­ழேந்தி அமர்வுமுன்­பாக நேற்று விசா­ர­ணைக்குவந்­தது. அப்போது பொதுப்­ப­ணித்துறை தரப்பில், “தாமிரபரணி ஆற்­றின் ஓரங்­களில் மக்­கள்வசிக்கும் இடங்­க­ளில் பெரும்­பா­லும் கழிவு­கள் கலக்கின்­றன.ஆறுகளின் மாசு தொடர்­பாக மாசுக் கட்டுப்­பாட்டு வாரியமே
நட­வடிக்கை எடுக்கும். பொதுப்­பணித்துறை நடவடிக்கை எடுக்கஇயலாது.” எனதெரிவிக்­கப்­பட்­டது.
அதற்கு நீதிபதிகள், “தாமிரப­ரணி ஆற்றுக்கு உரிமை கோரும் நெல்லை மாந­கராட்சி கட­மைக­ளையும் பொறுப்­பெ­டுத்­துக்
கொள்ள வேண்டும்” என்­ற­னர்.பின்­னர் நீதிபதிகள், “இந்த வழக்­கில் மாசுக் கட்டுப்­பாட்டு வாரியத்தின் தலை­வர் மற்றும் நெல்லை, தூத்­துக்குடி மாவட்ட செயற் பொறி­யா­ளர்­கள்,   சுற்று ச்­சூ­ழல் துறை­யின் நெல்லை, தூத்­துக்குடி மாவட்ட கண்­காணிப்புப் பொறியா­ளர்­களை நீதி­மன்­றம் தாமாக முன்வந்து எதிர் மனுதா­ரர்­க­ளா­கச் சேர்க்­கிறது. உள்­ளாட்சி பகுதிகளில் ஆற்றில் கழிவுநீர் கலப்­பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க உள்­ள­னர் என்பது குறித்து மாசுக்­கட்டுப்­பாட்டு வாரியம் உள்­ளிட்ட சம்­பந்­தப்­பட்ட துறை­யி­னர் அறிக்கை தாக்­கல் செய்ய வேண்டும்.” என உத்­தரவிட்டு வழக்கின் விசா­ர­ணையைஅக்.3ம் தேதிக்கு ஒத்­தி­வைத்­த­னர்.