வேலூர், ஜுன் 28-வேலூர் மாவட்டம்,
குடியாத்தம்,கல்லூர்,எம்.ஜி.ஆர் நகர்
பகுதியை சேர்ந்த ரிக்ஷா தொழிலாளி சத்தியகுமார்(38) சங்கீதா குடும்பத்தினர் 5 பேர்குழந்தையுடன் நேற்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென பெட்ரோல் ஊற்றி தீ குளிக்கமுயற்சி மேற்கொண்டார்கள்.
கடந்த 22 ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த சந்துரு என்கிற கோழி என்பவர் மது போதையில் அவ்வழியாக வந்து கொண்டி ருந்த சத்யாவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி சரமாரியாக தாக்கியதாகவும், இதனால் படுகாயம் அடைந்த சத்யா மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்றுள்ளார்.
இது குறித்து சத்யாவின் ம னைவி சங்கீதா குடியாத்தம் நகர காவல் நிலை யத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாத தால்,பிறகு வேலூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்
அளித்துள்ளார்.அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என
கூறி ஆத்திரமடைந்து இன்று தனது
கணவர் சத்தியா, தாய் மற்றும் ஒரு
குழந்தை உட்பட குடும்பத்தினர்
ஐந்து பேருடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து
பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்துள்ளனர்.இவர்களை அங்கிருந்து காவல்துறையினர் விரைவாக செயல்பட்டு தடுத்து
நிறுத்தி தண்ணீரைஊற்றிமீட்டுள்ளனர்.இதில் சங்கீதா மயக்க மடைந்த நிலையில் அவரை 108
ஆம்புலன்ஸ் மூலம் மரு த்துவ மனைக்கு அனு ப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்தது
அடிப்படையில் சத்துவாச்சாரி காவல் துறையினர் வழக்கு பதிவு
செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவரை தாக்கியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி பெண் குடும்பத்தோடு தீ குளி க்க முயற்சி!






