சேரன்மாதேவியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

சேரன்மாதேவி

சேரன்மாதேவியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

சேரன்மாதேவி
சார் ஆட்சியர் அலுவலகம், சேரன்மாதேவி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் இணைந்து, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியானது சேரன்மாதேவி பேருந்து நிலையத்தில் தொடங்கி, காந்தி பூங்கா வரை நடைபெற்றது. சேரன்மாதேவி தாசில்தார் வின்சென்ட் தலைமை தாங்கி கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். சேரன்மாதேவி பேரூராட்சி மன்ற தலைவர் தேவி அய்யப்பன் முன்னிலை வகித்தார். கிராம உதயம் ஆலோசனைக் குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் வரவேற்புரை ஆற்றினார் . நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கிராம உதயம் நிறுவனர் இயக்குனர் சுந்தரேசன் கலந்து கொண்டார். இதில் சேரன்மாதேவி பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் காதர், கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஸ்வரி, திட்ட ஒழுங்கிணைப்பாளர்வக்கீல் ஜெயலட்சுமி, பகுதி பொறுப்பாளர்கள் முருகன், குமாரி ஆகியோர் கருத்துரை வழங்கினர். தொடர்ந்து காந்தி சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இப்பேரணியில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் மற்றும் மஞ்சள் துணிப்பைகள் வழங்கப்பட்டன. கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.