அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி.. பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு என்னாச்சு?

சென்னை: தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டு வருபவர் அன்பில் மகேஷ். இந்நிலையில் தான் இன்று திடீரென்று அன்பில் மகேசுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அன்பில் மகேசுக்கு இன்று உணவு சாப்பிட்டபோது திடீரென்று ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு அவர் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அன்பில் மகேசுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.