சேரன்மாதேவி
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்பு – தி.மு.கவினர் உற்சாக கொண்டாட்டம்
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்றதை கொண்டாடும் விதமாக, சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகே தி.மு.கவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினர். இதில் சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி என்ற பிரபு, நகரச் செயலாளர் மனிஷா செல்வராஜ், கூட்டுறவு பண்டக சாலை முன்னாள் துணைத் தலைவர் டேவிட் ஸ்டீபன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன், கவுன்சிலர் அன்வர் உசேன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கூனியூர் பஸ் நிறுத்தம் பகுதியில் தி.மு.கவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் கூனியூர் கிராம பஞ்சாயத்து தலைவர் முத்துகிருஷ்ணன், கூனியூர் அய்யப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் கங்கணான்குளம் பஸ் நிறுத்தம் அருகே தி.மு.கவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினர்.






