கொல்கத்தாக பயிற்சி பெண் டாக்­டர் கொலை: தொடரும் போராட்­டம் -– மருத்­துவ சேவை பாதிப்பு!

கொல்கத்தா , செப். 15 கொல்கத்தா பயிற்சி பெண் டாக்­டர் பாலி­யல் வன்­கொடுமை செய்­யப்­பட்டு கொல்லப்பட்ட சம்­பவத்தை கண்டித்து டாக்­டர்­கள் போராட்­டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மேற்கு வங்­காளமாநிலம் கொல்கத்தா­வில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்­துவக்கல்­லூரி மருத்­துவ­மனையின் பெண்பயிற்சி டாக்­டர்கடந்த மாதம் 9ம்தேதி பாலியல் வன்கொடுமை செய்­யப்பட்டு கொலை செய்யப்­பட்­டார். இந்தசம்­ப­வத்­தில் நீதிகிடைக்க வலியுறுத்தியும், சில அதி­கா­ரி­களை பணிநீக்­கம் செய்ய வலியுறுத்­தியும் பயிற்சி டாக்­டர்­கள் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்­டத்தில் ஈடுபட்டு வரு­கின்­ற­னர். பணிக்கு திரும்­பு­மாறு சுப்­ரீம் கோர்ட்டு உத்­த­ரவிட்­டும், பயிற்சி டாக்­டர்­க­ளின் போராட்­டம் நீடித்து வருகிறது.அதே­வேளை, கடந்த11ம் தேதி பேச்சு­ வார்த்­தைக்கு வரு­மாறு அரசு சார்பில் கோரிக்கை விடுக்­கப்பட்­டது. ஆனால்,பேச்சுவார்த்­தைக்கு வர பயிற்சி டாக்­டர்­கள் நிபத்­தனை விதித்த­னர். அந்த நிபந்­தனை­களை மாநில அரசு ஏற்க மறுத்­ததால் அன்­றைய தினம்ப பேச்சுவார்த்தை  நடை­பெ­ற வில்லை. இத­னி­டையே ,தொடர்ந்து 5வது நாளாக போராட்­டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி டாக்­டர்­களை மேற்கு வங­காள முதல்-­மந்திரி மம்தாபானர்ஜி இன்று நேரில் சந்தித்­தார். அப்­போது, கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவ­டிக்கை எடுக்­கும் என­வும் தயவு செய்து பணிக்குதிரும்­புங்­கள் என்­றும் பயிற்சி டாக்­டர்­க­ளி­டம் மம்தாக கோரிக்கைவிடுத்­தார். ஆனால்,போராட்­டத்தை கைவிட பயிற்சி டாக்டர்­கள் மறுத்­துவிட்­டனர். இந்நி­லை­யில்,பயிற்சி டாக்­டர்­களின் போராட்­டம் தொடர்ந்து இன்­றும் நீடித்து வருகிறது. கொட்டும் மழையி­லும் போராட்­டம்நடை­பெற்று வருகி­றது.பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்ககொடுமை செய்­யப்பட்டு கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டும், இக்குற்­றச்­செ­யலில் ஈடு­பட்ட அனைவ­ரையும் கைது செய்­யக்­கோ­ரியும் போராட்­டம் நடைபெற்று வருகிறது.அதே­போல், குற்­றச்­சம்­ப­வம் நடைபெற்ற இடத்­தில் தடயங­களை அழிக்க முயன்­றதாக கூறி கொல்கத்தா போலீஸ்கமிஷ­னர், மாநில சுகா­தா­ரத்­ துறைசசெயலாளர் ,துணை செயலாளர்­கள் 2 பேர் என4 பேர் பதவி வில­க கோ­ரியும் பயிற்சி டாக்­டர்­கள் போராட்­டத்தில் ஈடுபட்டு வரு­கின­ற­னர் .அப்­போ­ராட்­டத்­தால் கொல்கத்தா­வி ல் மருத்­துவ சேவை வெகுவாக பாதிக்­கப்பட்டுள்­ளது.