விசிகவினரின் போராட்டம் எதிரொலி அரசு உத்தரவால் மதுரையில் நள்ளிரவில் எடுத்துசென்ற கொடி கம்பத்தை மீண்டும் பாதுகாப்புடன் ஒப்படைத்த காவல்துறை.

விசிகவினரின் போராட்டம் எதிரொலி அரசு உத்தரவால் மதுரையில் நள்ளிரவில் எடுத்துசென்ற கொடி கம்பத்தை மீண்டும் பாதுகாப்புடன் ஒப்படைத்த காவல்துறை.

மதுரை மாவட்ட ஆட்சியர் சாதிய ரீதியாக செயல்படுவதோடு, மாவட்ட ஆட்சியர் விடுதலைச் சிறுத்தைகளை சாதிய வன்மத்தோடு பார்த்து அரசுக்கு எதிராக இங்கு ஒரு கலவரத்தை ஏற்படுத்திவிடுவார் என எண்ணத்தோன்றுகிறது – விசிக முதன்மை செயலாளர் பாவரசு பேட்டி.

 

மதுரை மாநகர் புதூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில்தெரு நுழைவாயில் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சில ஆண்டுகளாக கொடிகம்பம் இருந்துவந்துள்ளது. இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தேர்தல் நடத்தைக்காக கொடிமரத்தில் கொடி அகற்றப்பட்டு கம்பம் மட்டும் இருந்துவந்துள்ளது.இந்நிலையில் அந்த கொடி கம்பத்தை எடுத்துவிட்டு அதன் அருகிலயே நேற்று முன்தினம் 62 அடி உயர கொடிகம்பத்தை நட்டு கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு திடிரென உரிய அனுமதி இல்லை என கூறி மாவட்ட ஆட்சியரின் உத்தரவு என கூறி காவல்துறை மூலமாக கொடி கம்பம் அகற்றப்பட்டு அதனை காவல்துறையினர் எடுத்துசென்றனர். அப்போது நள்ளிரவில் காவல்துறையினர் மற்றும் விசிகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கொடி அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கொடி கம்பத்தை திரும்ப தர கோரியும் விடுதலை சிறுத்தைகட்சியினர் நேற்று இரவு தொடங்கி புதூர் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்

இதனைத்தொடர்ந்து மேலிட உத்தரவு என கூறி சிறிதுநேரத்தில் அகற்றப்பட்ட விசிக கொடி மீண்டும் கொண்டுவந்து விசிகவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அங்கு கூடிய பெண்கள் நடனமாடி கொண்டாடினர். பின்னர் 62 அடி விசிக கொடி கம்பம் மீண்டும் அதே பகுதியில் நடப்பட்டது.

கொடி அகற்றம் குறித்து பேசிய விசிக முதன்மை செயலாளர் பாவரசு செய்தியாளர்களிடம் பேசியபோது

1990 ஆம் ஆண்டு புதூர் பேருந்து நிலையத்தில் வி கொடியேற்றப்பட்டது. பின்னர் புதூர் பேருந்து நிலைய விரிவாக்க பணியின்போது மார்க்கெட் அருகிலேயே அரசு அனுமதியுடன் கொடியேற்றப்பட்டது நாடாளுமன்றத் தேர்தலின் போது தேர்தல் நடத்தையாக கொடிக்கம்பத்தில் கொடி அகற்றப்பட்டது

இந்நிலையில் அந்த கொடிகம்பத்திற்கு பதிலாக அதன் அருகிலயே 62 அடி கொடிகம்பம் நட்டு அதில் மதுரைக்கு திருமாவளவன் வருகை தர உள்ள நிலையில் கொடியை ஏற்ற ஏற்பாடு செய்திருந்தோம் காவல்துறை அனுமதியுடன் கொடி கம்பத்தை நட்ட நிலையில் திடீரென இரவு மாவட்ட ஆட்சித் தலைவர் அகற்ற உத்தரவிட்டதாக கூறி கொடி கம்பத்தை எடுத்துச் சென்றார்கள் இதற்காக விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டோம்

அரசு நேரடியாக தலையிட்டு தலைமைச் செயலாளர் முருகானந்தம் அவர்கள் விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் பேசினார். அவர் ஆணைக்கிணங்க கொடியை நட்டுள்ளோம்,

மதுரை மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்றுவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா சாதிய வன்மத்தோடு செயல்பட்டு வருகிறார் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத பகுதியில் தான் தலைமைச் செயலாளர் அவர்களுடைய ஆணையின்படி விடுதலை சிறுத்தை கட்சி கொடிகம்பம் அதே இடத்தில் கொடியேற்றலாம் என்று காவல்துறையும் வருவாய் துறை உத்தரவிட்டதன் பேரில் கொடிமரத்தின் நட்டுள்ளோம்

மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்கள் சாதிய வன்மத்தோடு விடுதலை சிறுத்தை கட்சிகள் கொடியை ஏற்ற மறுக்கிறார் மேலப்பட்டி கருவனூர் ஊமச்சிகுளம் புதூர் ஆகிய பகுதிகளில் வேண்டுமென்றே குறிப்பாக மேலப்பட்டி கிராமத்தில் நீதிமன்றம் கொடியேற்ற அனும

தி அளித்தபோதும் உத்தரவை மீறி கொடியேற்றக்கூடாது என ஆணை பிறப்பித்தார்.

விடுதலைச் சிறுத்தை திமுக கூட்டணியாக இருக்கக்கூடிய இந்த தருணத்தில் அரசுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகளை சாதிய வன்மத்தோடு பார்த்து இங்கு கலவரத்தை ஏற்படுத்த விட்டிருக்கிறார் என எண்ண தோன்றுகிறது மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும் இல்லை என்றால் மதுரை மாவட்டத்தில் போராட்டம் தொடரும் என்றார்.