காரைக்குடி, செப்.14 சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடியில் ஸ்ரீசண்முகநாதன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் பக்தர் ஒருவரல் 1971 ஆம் ஆண்டு சுப்புலட்சுமி என்ற யானை வழங்கப்பட்டது. யானைக்கு அமைக்கப்பட்டு இருந்த நிழல் குடையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் யானை சுப்புலட்சுமி தீக்காயம் அடைந்தது யானைக்கு மாவட்ட வன அலுவலர் நேரில் ஆய்வு செய்து மதுரை ஒரத்த நாடு உள்ளிட்ட பகுதியிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இரவு முழுவதும் மருத்துவ சிகிச்சை அளித்தனர்.ஆனால் சிகிச்சை. பலனின்றி யானை உயிரிழந்தது. குன்றக்குடி பொன்னம் பல அடிகளார் அஞ்சலி செலுத்தினார்.தற்போது குன்றக்குடி யானை சுப்புலட்சுமி மறைவையட்டி குன்றக்குடி முழுவதும் உள்ள கடைகளை அடைத்து வனிகர்சங்கத்தினர், கிராம மக்கள் சோகத்தில் ஆழ்த்துள்ளனர்.தற்போது யானை சுப்பு லெட்சுமியை கண்ணீருடன் கையெடுத்து கும்பிட்டு வழிபட்டு வருகின்றனர்.
காரைக்குடி அருகே குன்றக்குடியில் ஸ்ரீ சண்முகநாதன் கோவில் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு : குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பக்தர்கள் அஞ்சலி






