வெடி விபத்து மற்றும் மின்னல் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதி கனிமொழி எம்பி வழங்கினார

தூத்­துக்குடி பட்­டாசு ஆலை வெடிவிபத்­தில் பலி­யா­னவர்­களின் குடும்­பத்­திற்­கும், மின்­னல் தாக்கி உயி­ரி­ழந்­தவ­ரின் குடும்­பத்­திற்­கும் தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ரின் பொது நிவா­ரண நிதி­யி­லி­ருந்து நிவா­ர­ணத் தொகையை கனி­மொழி கரு­ணா­நிதி எம்பி, தூத்­துக்­குடி கலெக்­டர் க.இளம்­ப­க­வத் , ஊர்­வசி எஸ்.அமிர்­த­ராஜ் எம்­எல்ஏ, ஆகி­யோர் முன்­னி­லை­யில் வழங்­கி­னார்.தூத்­துக்­குடி மாவட்­டம் ஏரல் வட்­டம் குறிப்­பன் ­கு­ளத்­தில் உள்ளபட்­டாசு ஆலை­யில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ந்தேதி வெடி விபத்து ஏற்பட்­டது . இதில், அர­சர்­கு­ளத்தை சேர்ந்த முத்­து­கண்­ணன்(வயது21),விஜய் (25)ஆகி­யோர் நிகழ்­வி­டத்­தி­லேயே பலி­யா­கி­னார்.ஸ்ரீவை­குண்­டம் தாலுகா புளி­யங்­கு­ளத்தை சேர்ந்த செல்­வம்(26),ஆழ்­வார்­தி­ரு­ந­கரி அருகே உள்ள செம்­பூரை சேர்ந்த சுந்­த­ரம் மகன் ஐசக் பிர­சாந்த்(26),சின்­ன­ம­தி­கூ­டலை சேர்ந்த செந்­தூர்­கனி, முத்­து­மாரி ஆகி­யோர் படு­கா­ய­ம­டைந்­தனர்.இதில் உயி­ருக்கு ஆபத்­தான நிலை­யில் இருந்தஐசக் பிர­சாந்த், செல்­வம் ஆகி­யோர் சிகிச்­சைக்­காக நெல்லை அரசுமருத்­து­வக்கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வந்த நிலை­யில் செல்­வ­மும், ஐசக் பிர­சாந்­தும் சிகிச்சைபல­னின்றி பலி­யா­கி­னர்.இந்­நி­லை­யில் வெடிவிபத்­தில் பலி­யா­னவர்­க­ளுக்கு தலா 3 லட்­சம் ரூபா­யும் காயம் அடைந்­தவர்­களுக்கு ஒரு லட்­சம் ரூபா­யும் இழப்­பீ­டாக வழங்­கத் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் உத்­த­ர­விட்­டார். இத­னை­ய­டுத்து,தூத்­துக்­குடி மாவட்­டம் – ஆழ்வார்­தி­ரு­ந­கரி பேரூ­ராட்சி அலு­வல­கத்­தில் ,12/09/2024 அன்று நடைபெற்ற நிவா­ரண உதவி வழங்­கும் நிகழ்­வில் தமிழ்நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அறி­வித்­தபடி வெடி விபத்­தில் மர­ண ம­டைந்த நபர்­க­ளுக்கு தலா 3 லட்­சம் ரூபா­யும், காயம் அடைந்த இரண்டு நபர்­களுக்­குத் தல ஒரு லட்சரூபா­யும், கடந்த மாதம் 5ஆம் தேதி செம்­பூ­ரில் இடி மின்­னல் தாக்கி பலி­யான வீர­முத்து மதன் குடும்­பத்­தி­ன­ருக்கு 4 லட்சம் ரூபா­யும் இழப்­பீ­டாக திமுக துணைப் பொதுச்செய­லா­ள­ரும், நாடா­ளு­மன்ற குழுத் தலைவ­ரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி, தூத்­துக்­குடிமாவட்ட ஆட்­சி­யர் க.இ ள ம்­ப ­க ­வ த்முன்­னி­லை­யில் வழங்­கி­னார்.இந்­நி­கழ்ச்­சி­யில் தூத்­துக்­குடி மேயர் ஜெகன் பெரி­ய­சாமி, தூத்­துக்­குடி மாவட்ட பஞ்­சாயத்து தலைவர் பிரம்­ம­சக்தி,ஏரல் வட்­டாட்­சி­யர் கோபால்,திரு­வை­குண்­டம் வட்டாட்­சி­யர் ரத்னா சங்­கர்,ஆழ்­வார் திரு­ந­கரி பேரூ­ராட்சி தலைவர் சாரதா பொன்இசக்கி,பேரூ­ராட்சி செயல் அலு­வ­லர்மகா­ரா­ஜன், ஆழ்வை திமுக செய­லா­ளர் கோபி­நாத் மற்­றும் துறை சார்ந்தஅலு­வ­லர்­கள் உள்­ளிட்டோர் உடன் இருந்­தனர்.