பாதுகாப்பற்ற முறையில் நடக்கும் குடிநீர் திட்ட பணியை கண்டித்து
சேரன்மகாதேவியில் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்கு.
டிசம்பர் 7 ,
சேரன்மகாதேவியில் பாதுகாப்பாற்ற முறையில் நடக்கும் குடிநீர் திட்ட பணிகளை கண்டித்து சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றில் இருந்து களக்காடு நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பைப் லைன் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சேரன்மகாதேவி ஊருக்குள் நடந்து வரும் இப்பணியானது ஆமை வேகத்திலும் பாதுகாப்பாற்ற என்ற முறையிலும் நடந்து வருகிறது இதனால் இப்பகுதியில் விபத்தில் சிக்கியுள்ளனர்.20க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கி உள்ளது. இந்நிலையில் பணியினை விரைந்து முடிக்க கோரியும் பாதுகாப்பாக பணிகளைத் தொடரவும் சேரன்மாதேவி காந்தி பார்க் பேருந்து நிறுத்தம்,நவகைலாய கோயில் செல்லும் சாலை ஆகிய 2 இடங்களில் நேற்று நாற்று நடும் போராட்டம் நடந்தது. போராட்டத்தின் போது சமூக ஆர்வலர்கள் சாலையோரம் நாற்றுகளை நட்டு நூதன முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் மீது சேர்மாதேவி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விபத்தை ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பற்ற முறையில் பணிகளை மேற்கொள்பவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை, மாறாக நியாயம் கேட்டு போராடிய உள்ளூர் வாசிகள் மீது வழக்கு பதிவு செய்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.






