திருச்சியில் தசைநார் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டேனி அண்ட் பிரண்ட்ஸ் நிறுவன மருத்துவ முகாம்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7ஆம் தேதி உலக தசை நார் சிதைவு நோய் விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது இந்த நோய் மரபணு பரம்பரையாக தொடர்ந்து வரும் நோய்களில் ஒன்று இது ஒரு மிகவும் ஆபத்தான நோயாகும் இந்த நோய் அதிகமாக ஆண் குழந்தைகளையே பாதிக்கிறது மனித உடலில் உள்ள தசைகளை சரியாகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ள உதவும் டிஸ்ட்ரோபின்என்ற
தசையில் காணப்படும் ஒரு புரதம் இந்த நோயாளிகளுக்கு இல்லாததால் தசைநார் சிதைவு நோய் ஏற்படுகிறது இந்த நோய் உள்ளவர்கள் சுயமாக எந்த வேலையும் செய்ய இயலாது இவர்களுக்கு இருக்கும் சவால்களைப் பற்றிய சுகாதார நிபுணர்கள் சமூக சேவகர்கள் மற்றும் அனைத்து வகையான பொதுமக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு பல விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்திக் கொண்டு இருக்கிறது டேனி அண்ட் பிரண்ட்ஸ் நிறுவனம்
இந்த நோய் உள்ளவர்களுக்கு உதவும் சேவை
மனப்பான்மையோடு டேனி அண்ட் பிரண்ட்ஸ் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு 1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் லாப நோக்கம் அற்ற அமைப்பாக அரசாங்கத்தில் சமூக சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டது இதன் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தசைநார் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து உதவிகள் செய்து வருகிறது இந்த நிறுவனம்.
இந்த நிறுவனத்தை உருவாக்கியவர் ஜவஹர் மற்றும் ரஞ்சனி ஞானை
யா இவர்களுடைய மகன் டேனியல் இந்த வியாதியினால் நான்கு வயதிலேயே பாதிக்கப்பட்டு பின்பு அவர் தனது 17ஆம் வயதில் இறந்துவிட்டார் இவரின் நினைவாக இந்த அமைப்பு தொடங்கப்பட்டு தசை சிதைவு நோய்களின் குடும்பங்களுக்கு மருத்துவம் நிதி மற்றும் பல்வேறு வகையில் ஆதரவை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமை டேனியல் மற்றும் நண்பர்கள் குழு திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் ஏற்பாடு செய்தது.
இம் மருத்துவ முகாமிற்கு மதுரை CRC இயக்குனர்ஜெயசீலா ப்ளோரா தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக ஹோலி கிராஸ் கல்லூரி முதல்வர் ராஜகுமாரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இந்நிகழ்வில் டேனி மற்றும் நண்பர்கள் குழுவை சேர்ந்த பொது மேலாளர்
டெபியார்ட் ராஜ்
அனைவரும் வரவேற்று முகாமிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்
இம்முகாமில் தசை நார் நோயல் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது






