திருச்செந்தூரில் 1,200 போலீசார் பாதுகாப்புப் பணி – 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு
தூத்துக்குடி, அக். 26:
திருச்செந்தூரில் வருகிற் நவம்பர் 10ஆம் தேதி கந்தசஷ்டி விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, விழா ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மகாஷான் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துனைசக் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் மற்றும் அரச உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி சுமார் 1,200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியா, சிங்கப்பூர்,இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் பக்தார்கள் வரக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் மேலாண்மை குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.






