அம்பை அக்டோபர்: 2
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் ஸ்வாச் பாரத் தூய்மைப் படுத்துதல் முகாம் ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் கவிஞர் கல்லிடைக் குயில் உமர் பாரூக் தலைமையில் நடைபெற்றது.
டி.எம்.அப்துல் சமது அனைவரையும் வரவேற்றார்
.பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் க.இசக்கிப்பாண்டியன்,
நெல்லை ரயில்வே பாதுகாப்பு படை துணை ஆய்வாளர் சிவராஜ்
,திலகர் பள்ளி தலைமையாசிரியர் டாக்டர் சுபா,செயல் அலுவலர் பாலசந்தர்,
ஆகியோர் விழிப்புணர்வு கருத்துரை வழங்கினர்கள்
பேராசிரியர் விஸ்வநாதன்,
முகமது ஷரீஃப், மோகன், ரசாக், சீதாராமன்,கார்த்திக்,தானிஷ்,
தஸ்தகீர்,செல்வராஜ்,வசந்தி,பொருநை கூடலரசன், தாமிரபரணி லூர்து ராஜ் ஆகியோர் ரயில் பயணிகளுக்கு
,தூய்மை குறித்து,
விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள்
சாகுல் உசேன், தாமஸ்வாமி தாஸ், சிவபாலன், அந்தோணி ராஜ், சந்தன குமார்,
ஆகியோர் தலைமையில் வீ.கே.புரம்
சேனைத் தலைவர் பள்ளி,கல்லிடை திலகர் பள்ளி,
புனித மரியன்னை பள்ளி நாட்டு நலப்பணி மாணவர்கள் ரயில் தண்டவாளங்களிலுள்ள குப்பைகளை அகற்றினர்கள்
முன்னதாக ரயில் நிலையம் நடைமேடையில் தேங்கும்
குப்பைகளை சேகரிக்க, சங்கத்தின் சார்பில் பிளாஸ்டிக் தொட்டிகள் வழங்கப்பட்டன.
முடிவில் ஒளி மாலிக் நன்றி கூறினார்.






