பெட்ரோல் குண்டு வீசிய சிறுவர்கள்

கடையம்: தென்காசி மாவட்டம், கடையம் அருகே பாப்பான்குளம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இசக்கி (20). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுவர்களிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.500 கடனாக வாங்கியுள்ளார். இந்த பணத்தை அந்த சிறுவர்கள் பல முறை திருப்பி கேட்ட போதும் இசக்கி கொடுக்கவில்லை. இதனால் சில நாட்களுக்கு முன் இரு தரப்பிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சிறுவர்கள், இசக்கியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இசக்கி, ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் நேற்று அதிகாலை இசக்கி வீட்டின் மீது 2 பெட்ரோல் நிரம்பிய பாட்டிலை வீசியுள்ளனர். இதில் ஒன்று வெடித்து தீப்பிடித்து எரிந்தது. மற்றொன்று தீப்பிடிக்கவில்லை.  இதுகுறித்து இசக்கி ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 சிறுவர்களையும் கைது செய்தனர்.