திருச்சியில் கனரா வங்கி பணியாளர் சங்கத்தின் 4வது மாநில மாநாடு நடைபெற்றது.

திருச்சியில் கனரா வங்கி பணியாளர் சங்கத்தின் 4வது மாநில மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன பின்னர் மாநாட்டின் தலைவர் சிவலிங்கம் மற்றும் செயலாளர் பிரேமலதா செய்தியாளரிடம் கூறுகையில்

மத்திய அரசு மற்றும் IBA கூட்டணியின் பிடிவாதமான போக்கை எதிர்த்து வங்கி ஊழியர்களும் அதிகாரிகளும் போராட்ட பாதையில் உள்ளனர் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயல் திறன் சார்ந்த ஊக்கத்தொகை வங்கிகளில் வாரத்திற்கு 5 நாள் வேலை மற்றும் விடுபட்ட கோரிக்கை ஆகியவற்றிற்காக 12 வது
இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது

ஒவ்வொரு வங்கியின் செயல்திறன் அடிப்படையில் அனைத்து பணியாளர்களுக்கும் சீரானதாக இருந்தது மத்திய அரசு இதை தன்னிச்சையாக மாற்றி வங்கிகளின் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கு பன்மடங்கு தொகையை வழங்கியது

இதன் மூலம் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே பிரிவினை உருவாக்கியுள்ளது அனைத்து உறுப்பினர்களும் 2026 செப்டம்பர் 11 அன்று பங்கேற்ற ஒரு நாள் வேலை நிறுத்தம் எதிர்பார்த்த பலனை தரவில்லை என்றும்

எனவே திட்டமிட்டபடி 28 செப்டம்பர் 2026 முதல் 30 செப்டம்பர் 2026 வரை மூன்று நாள் வேலை நிறுத்தத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது

வங்கி ஊழியர்களும் அதிகாரிகளும் சினம் கொள்ள செய்யும் மற்றொரு பிரச்சனை வங்கிகளை வாரத்திற்கு 5 நாள் வேலை இந்த பிரச்சனை பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு உள்ளானது

இறுதியாக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 40 நிமிடங்கள் வேலை நேரத்தை அதிகரிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது இந்த திட்டமும் அன்று கையெழுத்திடப்பட்டது மத்திய நிதி அமைச்சகத்திற்கு அனுப்பி இருந்தாலும் அமைச்சகத்தின் ஆழ்ந்த மௌனம் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிடையே கவலையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது மேலும் தங்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளுக்கும் விரிவான அளவில் மக்களையும் ஊழியர்களின் சென்று சேரும் வகையில் ஆதரவளிக்குமாறு அச்சு மற்றும் ஊடகங்கள் வாயிலாக அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.