திருச்சியில் கிராம நத்தம் கணக்குகளில் பெயர் திருத்த சிறப்பு முகாம
திருச்சி, செப்.27:
திருச்சி மாவட்டத்தில் கிராம நத்தம் கணக்குகளில் விடுபட்ட பெயர்களை சேர்த்தல், பெயர் திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம் 9 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்றது.
திருவரம்பூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, மருங்காபுரி, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் மற்றும் தொட்டியம் ஆகிய 9 வருவாய் வட்டங்களில் இச்சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமில் கிராம நத்தம் அடங்கல் கணக்குகளில் விடுபட்ட பெயர்களை சேர்த்தல், நத்தம் சிட்டா கணக்குகளில் பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக தேவையான ஆவணங்களுடன் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து, பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட சேவைகளைப் பெற்றனர்.
ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை வருவாய் வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். முகாமில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர்.






