விஜயலட்சுமி 6ஆம் ஆண்டு நினைவு நாள்: 100-க்கும் மேற்பட்ட சாலையோர மக்களுக்கு மதிய உணவு
திருச்சி, செப்.22:
தமிழக வெற்றிக் கழகம் திருச்சி மாநகர கிழக்கு மாவட்டம், மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் கி. சதிஷ்குமார் அவர்களின் தாயார் திருமதி K. விஜயலட்சுமி அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, 100-க்கும் மேற்பட்ட சாலையோர மக்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு தொகுதி பொறுப்பாளர் தர்கா சௌகத், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் நிர்மல், அருண், மாணவரணி விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், பகுதி செயலாளர்கள் கௌதமன், சூர்யா, வெள்ளைச்சாமி, சிவா, டர்கீஸ், கணேசன், ஜீவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மலைக்கோட்டை பகுதி நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், மாலதி, பாண்டியன், பாத்திமா, மலர்விழி, அழகுபாண்டி, வீரமணி, அலங்கராஜ், சுதாகர் மற்றும் வட்டச் செயலாளர்கள் கோபிநாத், செந்தில், ஐயப்பன், மாதவன், வெங்கடேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு, சாலையோர மக்களுக்கு மதிய உணவு வழங்கினர்.
நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த மனிதநேய நிகழ்ச்சியில், சாலையோர மக்களுக்கு உணவு வழங்கி அவர்களின் நலனில் அக்கறை செலுத்தப்பட்டது.






