DAAPS சார்பில் முப்பெரும் விழா: சங்க வளாக திறப்பு, பொதுக்குழு கூட்டம் மற்றும் பூனா ஒப்பந்த விளக்கக் கூட்டம்

திருநெல்வேலி, செப்.20:
திருநெல்வேலி புத்தர் நகரில் செயல்பட்டு வரும் டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிடர் பொதுநலச் சங்கம் (DAAPS) சார்பில் முப்பெரும் விழா இன்று (20.09.2026) நடைபெற்றது.

சங்கத்தின் DAAPS வளாகத் திறப்பு விழா, வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் மற்றும் செப்டம்பர் 24-ஆம் தேதி தொடர்பான பூனா ஒப்பந்த விளக்கக் கூட்டம் ஆகிய மூன்று நிகழ்வுகள் ஒருங்கிணைந்து நடைபெற்றன.

புத்தர் நகர், திருநெல்வேலி-7 பகுதியில் அமைந்துள்ள சங்க வளாகத்தில் காலை 10 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கின. சங்க வளாகத்தின் முன்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுவர் டாக்டர் C. பன்னீர் செல்வன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, சுற்றுச்சுவர் அமைப்பதற்கு பங்களிப்பு செய்த நன்கொடையாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள கல்வெட்டை டாக்டர் திருமதி சாந்தி பன்னீர் செல்வன் திறந்து வைத்தார்.

42 நன்கொடையாளர்களுக்கு பாராட்டு

சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிக்கு நிதியுதவி வழங்கிய 42 நன்கொடையாளர்களும் விழாவில் சிறப்பாக கௌரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேநீர் விருந்து நடைபெற்றது.

பொதுக்குழுக் கூட்டம்

இதனைத் தொடர்ந்து சங்கத் தலைவர் C. சந்திரசேகரன் தலைமையில் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்கமாக சங்கக் கொடி மூத்த உறுப்பினர் திரு. K. சங்கரன் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. சங்கத்தை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பொதுக்குழுக் கூட்டத்தில் சங்கத்தின் கடந்த ஓராண்டுக்கான ஆண்டறிக்கை சமர்ப்பித்தல், ஓராண்டுக்கான வரவு–செலவு கணக்கு சமர்ப்பித்தல், சங்க வளாக சுற்றுச்சுவர் கட்டுமானத்திற்கான வரவு–செலவு கணக்கை சமர்ப்பித்தல் ஆகியவற்றை துணைச் செயலாளர் V. விஜயராஜா அவர்கள் சமர்பித்து விளக்கம் உரையாறினார்கள். பின் மேற்கூறிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

மேலும், சங்கப் பதிவை புதுப்பித்தல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனையும் சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் உறுப்பினர்களின் பொதுவான கருத்துகளை கேட்டறிதல் உள்ளிட்டவை கூட்டத்தில் இடம்பெற்றன.

பூனா ஒப்பந்த நாள் செப்டம்பர் 24.

பூனா ஒப்பந்த வரலாறு பற்றி துணைச் செயலாளர் V. விஜயராஜா, சங்க ஆலோசகர் திரு G.கவிப்பாண்டியன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

முடிவில் பொருளார் திரு M. அயயாத்துரை அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.

விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைவர் C. சந்திரசேகரன், செயலாளர் K.சுப்புரத்னம், துணைச் செயலாளர் V. விஜயராஜா, அமைப்பு செயலாளர் A. அய்யாத்தரை ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிடர் பொதுநலச் சங்கம் (DAAPS), புத்தர் நகர், திருநெல்வேலி–627007 (பதிவு எண்: 105/1992) சார்பில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.