லண்டன் ரேஸ் டிராக்கில் ‘மாஸ் காம்போ’: அஜித் அணி பந்தயத்தை தொடங்கி வைக்கும் விஜய்

நடிகர் அஜித் குமார் அணி பங்கேற்கும் கார்பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

நடிகர், அஜித் குமார் ரேசிங் அணி, இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் (Silverstone) பந்தயக் களத்தில் நடைபெற உள்ள 2026 மிச்செலின் லு மான்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்த கார்பந்தயப் போட்டியை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் இன்று இரவு சென்னையில் இருந்து விமான மூலம் இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறார்.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக செல்லும் முதல்வர் விஜய் உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிடுவார் என்றும் தமிழக அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.