திருநெல்வேலியில் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து சமூக சேவகர் டாக்டர் இரா. ஞானசோமராஜ் (இன்சூரன்ஸ் அட்வைசர்) சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
முகாமில் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் கண் மருத்துவப் பரிசோதனைகள் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
முகாமின் தொடக்க விழாவில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வஹாப், B.Com., MLA முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைக்கிறார்.
மேலும், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன், துணை மேயர் K.R. ராஜு B.A., D.Litt. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்கள், மண்டலத் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகிக்கின்றனர். சமூக சேவகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மருத்துவ முகாமின் பயன்களை பெற உள்ளனர்.
சிறப்பு அமைப்பாளர்கள்:
மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெறுவதற்காக A.L.P. தினேஷ், செய்யது, கோட்டூர் செய்யது முகைதீன், பிரபு பாண்டியன், அலெக்சாண்டர் முத்தையா, ஆரோன் தாசன், சிவசுப்பிரமணியன், அருள்வின் ரோட்ரிக்கோ, ரைமன்ட் வழக்கறிஞர் ஜூடு, சூப்பர் P. மணி, வழக்கறிஞர் பரமசிவன், இவர்களுடன் குணசேகர பாண்டியன் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
முகாமில் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு இலவச மருத்துவ சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.







