நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: 10 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா

காத்மண்டூ: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், இந்தியா 10 டன் அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை இந்திய விமானப்படை (IAF)யின் C-130J விமானத்தின் மூலம் அனுப்பியுள்ளது. மேலும் கூடுதல் நிவாரணப் பொருட்களை C-17 மற்றும் C-130 விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.