இன்சூரன்ஸ் இல்லாவிட்டால் பெட்ரோல் மறுக்கும் மாதிரி திட்டம்

புதுடெல்லி: முறையான 3ம் தரப்பு காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை மறுக்கும் வகையில் முன்னோடி திட்டத்தை உடனடியாக செயல்படுத்த ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, கடந்த 4ம் தேதி வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், முதற்கட்டமாக டெல்லியில் மாதிரி திட்டத்தை தொடங்கலாம் என நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், காப்பீட்டு நிலையை எரிபொருள் விற்பனையுடன் இணைப்பதன் மூலம் காப்பீடு இல்லாத வாகனங்களை எளிதில் கண்டறிய முடியும். இதற்காக தானியங்கி வாகன எண் அடையாள கேமராக்கள் பயன்படுத்தப்படலாம் என்றும், வரும் 21க்குள் காலக்கெடுவுடன் கூடிய செயல்திட்டத்தை தாக்கல் செய்யுமாறும் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.