சேரன்மாதேவியில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

சேரன்மாதேவி, ஆக.17:
சேரன்மாதேவி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க. சேரன்மாதேவி ஒன்றிய மற்றும் பேரூர் கழக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் பழனிக்குமார் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், நடைபெற உள்ள இடைத்தேர்தலை எதிர்கொள்வது, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஒருங்கிணைத்து தேர்தல் பணிகளை மேற்கொள்வது, வாக்குச்சாவடி வாரியாக கட்சிப் பணிகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும், கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்துதல், பொதுமக்களிடம் கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை கொண்டு சேர்த்தல், இளைஞர்கள் மற்றும் புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைத்தல் உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் அ.தி.மு.க. கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான சௌந்தரராஜன், மாவட்ட அவைத் தலைவர் பூனியூர் மாடசாமி, மாவட்ட துணைச் செயலாளர் செவல் முத்துசாமி, மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராகவன், அம்பை மேற்கு ஒன்றிய செயலாளர் கோபிநாத், அம்பை கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமன், வி.கே.புரம் நகரச் செயலாளர் கண்ணன், அம்பை நகரச் செயலாளர் வடிவேல், வீரவநல்லூர் நகரச் செயலாளர் முருகன், பத்தமடை நகரச் செயலாளர் சீனிவாசன், கோபாலசமுத்திரம் நகரச் செயலாளர் திருமலை நம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், மாவட்ட மகளிரணி கிறாஸ் இமாக்குலேட், அண்ணா தொழிற்சங்கம் மகேஷ், மாணவர் அணி சுப்பிரமணியன்,  வழக்கறிஞர் அணி ஓடக்கரை, அமல்ராஜ் , இலக்கிய அணி மாவட்டத் தலைவர் சரவணன்,   உள்ளிட்ட பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ரவிச்சந்திரன், நம்பி, மகாராஜன் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் நிறைவில், வரவிருக்கும் தேர்தல் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொண்டு கட்சியின் வெற்றிக்காக முழு வீச்சில் செயல்பட வேண்டும் என நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.