சேரன்மாதேவியில் தமிழ் மாநில விஸ்வகர்மா நண்பர்கள் சங்கத்தின் 33வது ஆண்டு விழா


சேரன்மாதேவி:
சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகே உள்ள மண்டபத்தில், தமிழ் மாநில விஸ்வகர்மா நண்பர்கள் சங்கத்தின் 33வது ஆண்டு விழா மற்றும் நெல்லை, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த சமுதாய மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்டத் தலைவர் சதாசிவம் மற்றும் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட இணைச் செயலாளர்கள் நடராஜ், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் தக்கலை நடராஜன் சிறப்புரையாற்றினார்.

விழாவில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சேரன்மாதேவி நிர்வாகிகள் ஆறுமுகநயினார், சங்கரன், மேகலிங்கம் மற்றும் வட்டக்கிளை நிர்வாகிகள், நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவின் நிறைவில் மாவட்டப் பொருளாளர் தியாகராஜன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட இணைச் செயலாளர் நாங்குநேரி கண்ணன் செய்திருந்தார்.