சுதந்திர தின விழா: முதல் அமைச்சர் விஜய்யின் பெற்றோர், நடிகை திரிஷா பங்கேற்பு…

சுதந்திர தின விழாவில் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும், நடிகை திரிஷாவும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்….

சென்னை:
நாட்டின் 80 -வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல்முறையாக ஆட்சி அமைத்துள்ள தவெக அரசின் சார்பில் முதல் சுதந்திர தின விழா இன்று நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் சென்னை கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று காலை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலிருந்து புறப்பட்டார் மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே வந்த விஜய்க்கு காவல்துறையினர் மோட்டார் சைக்கிள் அணி வகுப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் கோட்டைக்கு வந்தார் கோட்டையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட விஜய் பின்னர் திறந்த ஜிபில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார், இதை அடுத்து சரியாக காலை 8:45 மணிக்கு கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர்கள் மரியாதை செலுத்தினார்.

திரிஷா பங்கேற்பு :

இந்த சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜயின் பெற்றோர் எஸ் ஏ சந்திரசேகர், சோபா சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நடிகை திரிஷாவும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் விஜயின் பெற்றோர் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகிலேயே திரிஷாவுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது அதாவது முதல் வரிசையில் திரிஷா அமர வைக்கப்பட்டு இருந்தார்.
காவல்துறையினரின் அணிவகுப்பை விஜய் பார்வையிட்டபோது, அவர் சல்யூட் அடித்தார். அப்பொழுது திரிஷாவும் முதல்வர் விஜயை பார்த்து சல்யூட் அடித்தார். விழா நிறைவடைந்து முதல்வர் விஜய் புறப்பட்டு சென்றபோது அவரது பெற்றோர் மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் கையசைத்து அவரை வழியனுப்பி வைத்தனர். சுதந்திர தின விழாவில் நடிகை திரிஷா கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.