வீரவநல்லூர் அரசு பொது நூலகத்தில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலம்

வீரவநல்லூர்: வீரவநல்லூர் அரசு பொது நூலகத்தில் 80-வது சுதந்திர தின விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

வாசகர் வட்டத் தலைவர் Rtn. ஆதம் இல்யாஸ் தலைமையில் நடைபெற்ற விழாவில், வாசகர் வட்ட பொருளாளர் பெரியார்பித்தன் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்றார்.

வாசகர் வட்ட துணைத் தலைவர் கவிஞர் க. உலகநாதன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, வாசகர் வட்ட கௌரவத் தலைவர் PAG. Rtn. சீ. இசக்கிசரவணன், அரசு வழக்கறிஞர் மற்றும் வாசகர் வட்ட இணைச் செயலாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் சுதந்திர தின சிறப்புரையாற்றினர்.

விழாவில் நூலக வாசகர்கள் மற்றும் வாசகர் வட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடினர்.

நிகழ்ச்சியின் நிறைவில் வாசகர் வட்ட பொதுச் செயலாளர் Rtn. R. சந்திரசேகர் நன்றி கூறினார்.