போதை இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி – திருச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்ட மாணவ மாணவிகள்.

போதை இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி – திருச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்ட மாணவ மாணவிகள்.

தமிழகத்தில் போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் நோக்கில், தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, “போதை இல்லா தமிழ்நாடு” என்ற தலைப்பிலான மாபெரும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்வில், முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொண்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, மாநிலம் முழுவதும் உள்ள மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். முதல்வரின் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி காணொளி வாயிலாக தமிழகம் முழுவதும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதிக் தாயள் தலைமை தாங்கி, மாணவர்களுடன் இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் டோங்ரே, மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போதை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.