சேரன்மகாதேவியில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அருகே மலை போல் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

சேரன்மகாதேவியில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அருகே மலை போல் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

‎மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம்

‎சேரன்மகாதேவி,ஆக. 10: சேரன் மகாதேவியில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அருகே மலை போல் குவிந்து கிடக் கும் குப்பை கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
சேரன்மகாதேவி பேரு ராட்சியில் 18 வார்டுகளில் சுமார் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வீடுகள் மற் றும் கடைகளில் சேகரிக் கப்படும் குப்பை கழிவுகள் டானா அருகே ரவுண்ட உள்ள குப்பை கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கு குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரமாகமாற்றப்படும். ஏனைய குப்பை கழிவுகள் மலையடிவாரப்ப குதியில் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டு

வந்தது.

இந்நிலையில் மலையடிவாரப் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவ தால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் குப் பைகளை போடுவதற்கு வனத்துறை தடை விதித்தது. இதனையடுத்து எஞ் சிய குப்பைக் கழிவுகளை இடுவதற்கு போதிய இடம் இல்லாத காரணத்தால் குப்பைகிடங்கிலதற்போது மலை போல் குப்பை கழிவு கள் தேங்கியுள்ளது. குப்பை அள்ளும் வாகனங்கள் கூட குப்பை கிடங்கிற்கு உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளதால் சாலையோரம் காம்பவுண்ட் சுவர் அருகே குப்பைப வண்டிகளை நிறுத்தி தூய்மை பணியாளர்கள் கைகளால் குப்பை கழிவுகளை சுவரை தாண்டி அள்ளிபோடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த குப்பை கிடங்கை ஒட்டியே மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியும் உள்ள தால் குடிநீர் மூலம் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற் பட்டுள்ளது. இந்த குப்பை கிடங்கிற்கு மிக அருகில் நூற்றுக்கணக்கான குடி யிருப்பு வீடுகளும் உள்ள சூழலில் குப்பை கிடங்கிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

‎எனவே மாவட்ட நிர்வாகம் குப்பை கிடங் கொண்டு சேரன்மகாதேவியில் நேரடி ஆய்வு மேற் வியில சேகரிக்கப்படும் குப்பைகளை கையாளுவதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.