திருத்தணி முருகன் கோயிலில் காவடி எடுத்து நடிகை ரோஜா தரிசனம்

இந்நிலையில், நடிகையும் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா, ஆந்திர மாநிலம் நகரியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து மலர் காவடியுடன் திருத்தணி முருகன் கோயிலுக்கு இன்று காலை வருகை தந்தார். பின்னர், மூலவரை பயபக்தியுடன் தரிசனம் செய்து உற்சவருக்கு காவடி செலுத்தினார். அவருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில், மாலை அணிவித்து விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் அவருடன் ஏராளமான பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். ஆண்டுதோறும் ஆடி கிருத்திகையின்போது நடிகை ரோஜா முருகப்பெருமானுக்கு காவடி செலுத்தி சாமி தரிசனம் செய்து வேண்டுதல் நிறைவேற்றுவது குறிப்பிடத்தக்கது.