தவெகவின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?

சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்தது. லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என்று தவெக கூறியுள்ளது. திமுக, அதிமுகவுக்கு மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சியை பிடித்த தவெக அரசின் முதல் பட்ஜெட் சட்டமன்றத்தில் இன்று காலை தாக்கல் செய்யப்படவுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா, வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தவெக ஆட்சியமைத்து 3 மாதங்களாகிவிட்டது. அரை நூற்றாண்டு திராவிட அரசியல் ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டு தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. தேர்தலில் தவெக அரசு நிறைய வாக்குறுதிகளை கொடுத்தனர். மகளிர் உரிமை தொகையை 2,500 ஆக உயர்த்துவோம், வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் வழங்குவோம், விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி, அண்ணன் சீர் வரிசை, அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம், வேலையில்லா பட்டதாரிகக்கு ரூ.4,000 உதவி தொகை உள்ளிட்ட பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.
தவெகவின் முதல் பட்ஜெட் தவெக ஆட்சிக்கு வந்தவுடன் 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்க பெண் பாதுகாப்பு படை ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளன. தாய்மாமன் தங்க மோதிர திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாக்களித்த மக்களை தவெக ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள். தவெகவின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. முன்னதாக திமுக ஆட்சியில் கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் சட்டமன்றம் கூடுகிறது. அதனை தொடர்ந்து நிதியமைச்சர் மரிய வில்சன் 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். நாளை வேளாண்துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். பட்ஜெட் குறித்து மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகமுள்ளது.

திட்டங்கள் இருக்குமா மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றுப்படும் என மக்கள் காத்திருக்கிறார்கள். திமுக, அதிமுக ஆட்சிகளை போல அல்லாமல் புதிய பார்வையுடன் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். மகளிர், இளைஞர், மாணவர் சார்ந்த பல அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்ந்தும் முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளது.