அம்பை, ஆக. 4:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள அருள்மிகு மரகதாம்பிகை சமேத காசிபநாதர் கோவில் படித்துறையில், ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கு சிறப்பு ஆரத்தி பூஜை கோலாகலமாக நடைபெற்றது.
அம்பை திருமூலர் தவமையம் மற்றும் அம்பிகா ஜுவல்லர்ஸ் இணைந்து 13-வது ஆண்டாக இந்த தாமிரபரணி ஆரத்தி பூஜை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன.
இந்நிகழ்ச்சியில் அம்பை வட்டாட்சியர் குமார், நகர்மன்றத் தலைவர் கே.கே.சி. பிரபாகரன், காசிபநாதர் கோவில் அறங்காவலர் ஏ.சி. ராதாகிருஷ்ணன், அம்பை நகர வியாபாரிகள் சங்க கவுரவத் தலைவர் சந்திரசேகரன், வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமசாமி (தாஸ்), பொதிகை மனவளக்கலை அறக்கட்டளை செயலாளர் பேராசிரியர் கே.ஏ. ராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தாமிரபரணி தாயை வழிபட்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மீனாட்சிநாதன், பொறியாளர் சஞ்சய்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஆரத்தி பூஜை நிகழ்வு பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.






