சேரன்மகாதேவியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா: பகுஜன் சமாஜ் கட்சி ,திராவிட கழகத்தின் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

சேரன்மகாதேவியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
சேரன்மகாதேவி, ஏப்.14 — புரட்சியாளர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் 136வது பிறந்தநாள் விழா சேரன்மகாதேவியில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவை முன்னிட்டு திராவிட கழகத்தின் சேரன்மகாதேவி ஒன்றிய தலைவர் செல்வ சுந்தரசேகர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. வீரவநல்லூர் நகரத் தலைவர் கருணாநிதி முன்னிலையில் பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டு அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினர்.

மேலும் மக்கள் கலை இலக்கியத்தைச் சார்ந்த பெரியார் பித்தன், சேரன்மகாதேவி ஆதிதிராவிடர் நல உரிமை சங்கத்தைச் சேர்ந்த நடராஜன், சாலமன், எஸ்.பி. முருகன், ஜீவன், வெங்கடேஷ், குமரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமையில், செயலாளர் தணேஷ், பேரின்ப செல்வன், பொருளாளர் சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ராம்குமார் மற்றும் அம்பாசமுத்திரம் சட்டமன்ற வெற்றி வேட்பாளர் இசை கண்ணன் (B.Sc., LL.B.) ஆகியோரும் பங்கேற்று அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினர்.

மேலும், திருநெல்வேலி பாராளுமன்ற தலைவர் சித்தார்த் சி. வாசன் மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்ற செயலாளர் சுடர் ஆகியோரும் கலந்து கொண்டு அம்பேத்கர் அவர்களின் சமூக நீதி கொள்கைகளை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.