திருச்சி, ஜூலை 21:
தமிழக முதல்வரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சரும், தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளருமான ஆனந்த் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி திருச்சியில் உற்சாகமாக நடைபெற்றது.
திருச்சி EB ரோடு மதுரம் மைதானத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கிரிக்கெட் தொடருக்கு தமிழக வெற்றி கழக கிழக்கு சட்டமன்ற பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் தலைமை வகித்தார். வேதாத்திரி மபாலுப முன்னிலை வகித்தார்.
23 வயதுக்குட்பட்ட, இளைஞர்களுக்காக நடத்தப்பட்ட இந்த போட்டித் தொடரில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. இரண்டு நாட்களும் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை ஏராளமான விளையாட்டு ஆர்வலர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் நேரில் கண்டு ரசித்தனர்.
இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய தோகைமலை அணி சாம்பியன் பட்டத்தையும் முதல் பரிசையும் வென்று கோப்பையை கைப்பற்றியது. FFCC காந்தி மார்க்கெட் அணி இரண்டாம் பரிசையும், EB மதுரம் பாய்ஸ் அணி மூன்றாம் பரிசையும், எக்சலன்ஸ் பாய்ஸ் அணி நான்காம் பரிசையும் வென்றன.
போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் சிறந்த பவுலர் விருதுகள் தனித்தனியாக வழங்கப்பட்டன. மேலும், வெற்றி பெற்ற அணிகளுக்கும் தனிநபர் விருது பெற்ற வீரர்களுக்கும் கேடயங்கள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கி பாராட்டப்பட்டனர்.
இந்த மாபெரும் கிரிக்கெட் தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தாராநல்லூர் முனீஸ்வரன் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார். போட்டி சிறப்பாக நடைபெற பல்வேறு கழக நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் ஒத்துழைப்பு வழங்கினர்.






